பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72症 விஞ்ஞானச் சிக்கல்கள் வரை எவரிடமும் கூறாத, கூற முடியாத ஒர் இரகசியத்தை மனதிலே தேக்கி மறைத்து வைத்திருந் தால், அதைக் கூறினால் போதும். பழம் மீண்டும் போய் மரத்திலே ஒட்டிக் கொள்ளும் என்றார் கோபாவன்.

கோவர்த்தனா: இப் பிறவியில் இல்லை. இனி எப் பிறவியிலும், மாயவா, உனை மறவா பேறு பெற வேண்டும் என்பதுதான்் எனது ரகசியமான ஆசை என்றார் தர்மர்!

நந்த கோபாலன், நகையாடியவாறே, தருமா? இது இரகசியமலவே, ஆசை சரி, போகட்டும் என்றார் கிரிதாரி'

எழுந்தான்் வீமன். தட்டினரின் தனது தடந்தோள்களை. காளிங்கமர்த்தனா, அண்ட சரா சரங்களையும் எனது புஜபல பராக்கிரமத்தால் எப்போதும் வென்று கொண்டே இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை என்றான்.

ஆயிரம் யானைகளது பலத்தைப் பெற்ற புஜபல பராக்கிரமனான வீமனுக்கு, வேறு என்ன ஆசை பிறக்கும் சரி. சரி என்றார் கம்சநிசூதனர்.

'சக்ரதாரி' எனது வில்லுக்கும் - அம்புக்கும் எவ்வளவுதான்் அரிய சக்தியிருந்தாலும், அவ்வளவும் உனது கடைக்கண் கொடுத்த பிச்சையாக அமைய வேண்டும். அதனால், இந்த அவனியையே நான் வெல்லும் திறன் பெற வேண்டும்” என்று அவர் காலில் விழுந்தபடியே முறையிட்டான் காண்டீபன். அசுவ ஏற்றத்திலும், அதன் ஒப்புயர்வற்ற கலைகளிலும் இனியொருவன் இந்த அவனி அழியும் வரை பிறக்கக் கூடாது என்றான் நகுலன்,