பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

萱 விஞ்ஞானச் சிக்கல்கள்

பாண்டவர்கள் ஒவ்வொருவரும் மாபெரும் ஆற்றல் பெற்ற மாவீரர்கள் என்பதை அறிவேன் நான். அவர்கள் என் மீது வைத்துள்ள அளப்பரிய அன்பையும் - பண்பையும் அறிவேன். அதுபோல, எனக்கும் அவர்கள் மீது தணியாத பற்றும் - பாசமும் என்றும் உண்டு.

"அப்படி இருந்தும், எனக்கு ஆறாவதாக கர்ணன் மீதும் காதல் உண்டு! இதை எப்படி வெளியே கூறுவது என்று இன்று வரை அதை அடக்கி வைத்திருக்கிறேன் அண்ணா என்றாள் திரெளபதி. உடனே, பழம் கண்ணன் கையினை விட்டு விர்ரென்று பறந்து போய் மரத்திலே ஒட்டிக் கொண்டதை எல்லாரும் கண்டு வியந்தனர்.

கோபால கிருஷ்ணன் திரெளபதியைப் பார்த்தார். முகம் சிவந்த அந்த உத்தமியின் ரகசியத்தைப் பாராடடினாா.

பாண்டவரை நோக்கினார் பரந்தாமன். பாண்டு புத்திரர்களே! இதுதான்் ரகசியம். நீங்கள் கூறியவை ஆசைகள். திரெளபதி கூறியதும் பழம் மரத்திலே போய் ஒட்டிக் கொண்டதை நீங்களே பார்த்தீர்கள் இல்லையா? என்று கூறினார் சிரித்தபடியே!.

கண்ணன் கையிலே இருந்த கனி, ஒரு சிக்கலை உருவாக்கியது. அதைத் தனது ரகசியம் வாயிலாக பாஞ்சாலி அவிழ்த்தாள். அதனால், உலகுக்கு ஒர் சமுதாயத் தத்துவம் கிடைத்தது.

ஐந்து கணவர்கள் பாஞ்சாலிக்கு இருக்கும்போது, ஆறாவதாகக் கண்ணன் மீதும் அவள் காதல் கொண்டாள். இதுதான்் அவள் அவிழ்த்த சிக்கல்!