பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி ö7$ உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை, மனித சமுதாயம் எப்படியெல்லாம் உருவாகி வளர்ந்து வாழ்ந்து வருகிறது என்பதின் கோட்பாட்டைப் பாஞ்சாவியின் பதிலிலே ரகசியத்திலே, நாம் பார்க்கிறோம்.

இராமயணக் காலச் சமுதாயம் எப்படி வாழ்ந்தது என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன.

தசரதனுக்கு இருபத்தையாயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணக் குறிப்பு நமக்கு கூறுகிறது.

அவற்றை எல்லாம் ஆய்வதல்ல நமது குறிக்கோள்.

அதேபோல, பாரதக் காலச் சமுதாயம் எப்படி வாழ்ந்தது என்பதற்கு எத்தனையோ மகாபாரத இதிகாச சான்றுகள் உள்ளன.

இராமயணக் காலச் சமுதாயத்தில், ஒர் ஆண் பல மனைவியரை மணக்கலாம் என்ற சமுதாயத் தத்துவம் தலைதுரக்கி இருந்தது. இந்த பழக்கப்பட்ட கோட்பாட்டை, அக்காலச் சமுதாய நெறியை ஆங்கிலத்தில் PolyGamy அதாவது பன்மனை மணமுறை என்று அழைக்கிறார்கள்.

இதற்குச் சான்று தசரதன் ஆயிரக்கணக்கான ஆரணங்குகளை மணம் செய்து வாழ்ந்ததே உதாரணமாகும்.

பாரதக் காலச் சமுதாயத்திலே வாழ்ந்த ஒரு

பெண், பல கணவர்களை பகிரங்கமாகவே மணந்து கொள்ளலாம் என்பது அக்காலப் பண்பாடாக

இருந்தது.