பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穹盘 விஞ்ஞானச் சிக்கல்கள்

இந்தச் சமுதாயத் தத்துவத்தை ஆங்கிலத்தில் Polyandy, அதாவது பல் கணவர் உடைமை என்று கூறுகிறார்கள். பாஞ்சாலி, குந்திதேவி போன்றவர்கள் இதற்கான சான்றுகளாக விளங்குகிறார்கள்.

ஒரு பெண் ஐந்து பேரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை அப்போது இருந்திருக்கிறது.

அதற்குப் பிறகும் யார் மீதாவது அவளுக்கு ஆசையிருந்தால், அதை வெளியே பகிரங்கமாக கணவர்கள் எதிரிலேயே சாட்சியோடு கூறுமளவுக்கு பெண்களுக்கு உரிமையும் இருந்தது என்பதை, பாரதக் காலச் சமுதாயம் நமக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது.

ஒர் ஆண் பற்பல பெண்களை மணக்கும் இராமயணக் காலச் சமுதாயத்தில்கூட, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தமிழர் இல்வாழ்க்கைத் தத்துவம் இருந்து வந்திருக்கிறது என்பதற்கு சான்றாக, தசரதன் மகன் ராமன் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.

அதே போல, பாரதக் காலச் சமுதாயத்தில் ஒர் ஆண் பல பெண்களை மனக்கலாம் என்ற இராமயணக் காலச் சமுதாயத் தத்துவம் இருந்தது என்பதற்கு, அருச்சுனன் சென்ற இடங்களிலெல் லாம் ஒவ்வொரு பெண்ணையும் மணந்த பல சம்பவங்கள் சான்றாக உள்ளன.

தமிழ்ச் சமுதாயம் என்று தோன்றியதோ, அன்று முதல் இன்று வரை, ஒருவனுக்கு ஒருத்திதான்் என்ற திருக்குறள் வாழ்க்கைச் சட்டப்படி வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம்.