பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 凸77 கண்ணன் கையிலே சிக்கிய கனி, பாரதக் காலச் சமுதாயத்தின் பண்பை, அது எப்படி வாழ்ந்தது என்ற குறிக்கோளை, இன்றும் உலகுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.

உலகச் சமுதாயங்கள் எவ்வாறு வளர்ந்துவாழ்ந்து வந்திருக்கின்றன என்ற வரலாற்றுப் பயணத்திலே, கண்ணன் கைக் கனி ஒரு மைல் கல்லாகக் காட்சியளிக்கிறது.

பெண்கள் எப்படியெல்லாம் சமுதாயச் சூழ் நிலைகளிலே வாழ்ந்தார்கள் என்பதைப் பாஞ்சாலி அவிழ்த்து விட்டச் சிக்கலிலே உலகம் கண்டு வியப்படைகிறது.

உலக மனித இன வரலாற்றுச் சமுதாயங்களில், ஒவ்வொரு காலத்துக்கும் அதன் சூழ்நிலைகளுக்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட - வேறுபட்ட பண் பாட்டு எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் அமைந்துள்ளன.

அந்த வரலாற்று நிகழ்ச்சிகளிலே ஒன்றைத்தான்் கண்ணன் கையிலே சிக்கிய கனி, உலக சமுதாயத்துக்கு உணர்த்தி வருகிறது.

இரண்டாவதாக மற்றொரு கனி, ஒரு மாபெரும் சிக்கலை, பலமாக - மிக சிக்கலாக உருவாக்கியது.

ஒரு நாள் தனது தோட்டத்திலே சர் ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞான மேதை உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவர் கண்டுபிடித்திருந்த இயக்க - இயல் துறையின் அடிப்படையான விஞ்ஞான விதிகளைப் பற்றி ஏதோ சிந்தித்துக் கொண்டிருந் தார்.