பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

窯擔 விஞ்ஞானச் சிக்கல்கள்

ஒர் ஆப்பிள், அவர் எதிரே, கீழே அப்போது விழுந்தது. அதைக் கையிலே எடுத்தார், சிந்தித்தார், சிந்தித்தபடியே அவர் உட்கார்ந்திருந்தார்.

மரத்திலே இருந்து விழுந்தக் கனி, கீழே மட்டும் விழுவானேன்? ஏன், மேல் நோக்கிப் போகவில்லை? இதுதான்் அவரது சிந்தனையின் வினா?

மேல் நோக்கிப் போகச் சக்தியற்ற கனியிடம்கீழ் நோக்கி மட்டும் வரும் மர்மம் என்ன இருக்கும்? என்று அவர் சிந்தித்தார்.

'உலகத்திலுள்ள பொருள்களின் ஒவ்வொரு துகளும், மற்றெல்லாப் பொருள்களிலும் உள்ள ஒவ்வொரு துகளையும் கவர்ந்து வருகிறது.” என்ற தத்துவத்தை, அந்த பழம் கீழ் நோக்கி வீழ்ந்ததிலிருந்து நியூட்டன் கண்டு பிடித்தார்.

'ஆப்பிள் மரத்தில் உள்ள பழத்தை பூமி கவர்ந்து இழுக்கிறது என்பது மட்டுமல்ல, ஆப்பிள் பழமும் பூமியைக் கவர்ந்து இழுக்கிறது”. என்று, தனக் கேற்பட்ட சிக்கலைச் சிறிது சிறிதாக அவர் அவிழ்த்தார்.

நியூட்டனின் சிந்தனையிலே சிக்கிய கனி, ஆப்பிள் பழத்தோடு மட்டும் போகவில்லை. வானியலையும் மீறி ஊடுருவிச் சென்றது.

"கதிரவன், பூமியைக் கவர்ந்து இழுக்கிறது.பூமி, நிலவைக் கவர்ந்திழுக்கிறது. இந்தச் சிக்கல் எல் லாக் கோள்களுக்கும் பொருந்தும், என்பதனைக் கண்டு, ஆதாரங்களோடு அவரொத்த விஞ்ஞானி களுக்கு விளக்கி மெய்ப்பித்தார்.