பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி ö7驮 ஆப்பிள் பழம் உருவாக்கிய சிக்கல், உலகுக்கே மாபெரும் விஞ்ஞான விதியை உருவாக்கும் சிந்தனையாக மாறியது.

'ஒன்றையொன்று கவரும் இரண்டு பொருள் களுக்கு இடையே செயல்படும் விசையானது, அப் பொருள்களின் பொருண்மையையும் - அவை ஒன்றிலிருந்து ஒன்று எவ்வளவு நெருங்கி இருக்கின்றன என்பதையுமே பொருத்துள்ளன' என்ற தத்துவத்தை, விஞ்ஞானமேதை நியூட்ட னின் சிந்தனை மூலமாக ஒரு கனி நமக்குக் கிடைக்கச் செய்து விட்டது.

இந்த அரிய தத்துவத்தை வைத்துக் கொண்டு வானியலை நோக்கினார். மேலும், பல உண்மைகள் அவரது ஆராய்ச்சியின் முன் மண்டியிட்டன.

பூமியும் - மற்ற கோள்களும் -சூரியனைச் சுற்றி ஒடி வரும் இயக்கங்களும் எவ்வாறு இயங்குகின்றன என்பதற்கும், அந்தக் கனியினால் ஒரு வான் தத்துவம் நமக்குக் கிடைத்தது.

அதனால், பூமியின் பொருண்மையையும் - பகலவன் பொருண்மையையும் அவர் கணக்கிட்டார். பூமி, துருவப் பகுதிகளில் சற்றுத் தட்டையாகவும், மத்தியக் கோட்டுப் பகுதியில் சற்றுப் புடைத்தும் இருப்பது ஏன், என்ற வேறொருச் சிக்கலையும் அவர் அவிழ்த்தார்.

அந்த சிக்கலை அவிழ்க்க அவர் கணித முறையிலே தக்க வழிகளைக் கண்டுபிடித்தார்.

பூமியைச் சுற்றி நிலா தன் அயன விதிகளில் ஒடி வரும்பொழுது, அது தள்ளாடித் தடுமாறுவதைப் பார்த்து வியந்தார் - திகைத்தார்.