பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

發鑲 விஞ்ஞானச் சிக்கல்கள்

நிஇைக்கும்-டுக்குமிடையே ஏன் இந்த தள்ளாட்டம். வயோதிக நடை! வழுக்கலோ இடறலோ அயன விதிகளில் உருவாகுமோ? அப்படி உருவானால். திகைத்தார் முதலில் - பயந்தார்.

அந்த தள்ளாட்டங்கள் வழக்கமாகவே நடைபெறுகின்றன என்பதைக் கண்டு அவற்றில் எது எது முக்கியமானவை என்பதை உணர்ந்தார்.

பூமிக்கும் - நிலவுக்கும் இடையே ஏன் இந்த தள்ளாட்டம் என்ற வேறோர் சிக்கலை உருவாக்கிக் கொண்ட நியூட்டன், சூரியனுடைய பொருண்மை சந்திரனைக் கவர்வதால் அவை உண்டாகின்றன என்பதைத் தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டு - அந்த சிக்கலை அவிழ்த்தார்.

அதே போல 'சந்திரனும் - பூமியும், உலகிலே உள்ள தண்ணீர் மீதும் தங்களது கவர்ச்சித் திறனைக் காட்டி இழுக்கின்றன” என்ற, மற்றோர் அறிவியல் செல்வத்தை, உலகுக்குக் கொடுத்தார்.

தோட்டத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த சர். ஐசக் நியூட்டன் பாதத்திலே வீழ்ந்த ஆப்பிள் பழம், அந்த அறிவியல் மாமேதையிடம் மாபெரும் விஞ்ஞானச் சிக்கலை உருவாக்கியது.

அந்த சிக்கல்கள், உலகப் பெரும் சிந்தனையாளர் ஒருவரின் ஆராய்ச்சிகளுக்கு இடையே அடிபட்டு, அவை மோதி, மேதினிக்குப் பல அற்புதமான அறிவியல் தத்துவங்களை அளித்துள்ளன.

அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தத்துவங்களைக் கொண்டு உருவான நூல் 'பிலாசபியே