பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 岱8赛 நேச்சுரலிஸ் பிரின்சிபியா” என்ற மாபெரும் விஞ்ஞான அறிவுக் களஞ்சியமாகும்.

அறிவுலகத்தையும் - அறிவியலுலகத்தையும் இந்த நூல் இன்றும் திடுக்கிட வைத்துக் கொண்டே இருக்கிறது என்று கூறலாம்.

இந்த விஞ்ஞான தத்துவ விளக்கங்களை இயற்றிய பிறகு தான்், நியூட்டன் என்றால் யார்? அவரது அறிவியல் ஆற்றல் என்ன? என்ற வினாக்களுக்குரிய உலகளாவிய புகழ் அவருக்கு ஏற்பட்டது.

இவ்வளவு அரும்பெரும் ஆற்றல்களுடன் அறிவியலிலே மகத்தான் சாதனைகளைக் கண்டுபிடித்த நியூட்டன், தன் வாழ்நாள் எல்லாம் மற்றவர்கள் வாதப் பிரதிவாதங்களுக்கு பதில் கூறுவதிலும் வழக்கு மன்றங்களைச் சந்திப்பதிலும், வம்படிச் சர்ச்சைகளால் வசைமாரி பெறுவதிலுமே காலம் தள்ளினார்.

இவற்றுக்கெல்லாம் காரணம், அவர் ஆண் டாண்டுதோறும் கண்டுபிடிக்கும் புதிய புதிய அறிவியல் சாதனைகளேயாகும்.

அழுக்காறு கொண்டோர், நியூட்டனை அவ்வாறு தாம் பழிவாங்கிய எதிர்ப்புகளால் அவர் மனதை விரக்தியடையும் நிலைக்கு கொண்டு சென்றனர்.

இறுதியாக, அவர் கண்டுபிடிக்கும் எந்த புதிய விஞ்ஞான விளக்கங்களையும் இனி எவருக்கும் கூறக் கூடாது என்ற முடிவுக்கே வந்து விட்டார்.

கி.பி. 1642, ஆம் ஆண்டில், கிறிஸ்துமஸ் விழாவன்று பிறந்த அந்த மனித குல மேதை,