பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

惑龙鲁 விஞ்ஞானச் சிக்கல்கள் வானியல் வித்தகர், கணிதத் துறை புலவர், விஞ்ஞான முன்னேற்றத்திற்குப் பலப்பல படிக்கட்டுகளைத் தன் ஆராய்ச்சியால் அமைத்து விந்தைகள் பல புரிந்த ஞானி கி.பி. 1727- ஆம் ஆண்டில் தனது 85வது வயதில் காலமானார்.

சர் ஐசக் நியூட்டன் காலடியிலே விழுந்த ஆப்பிள் பழம், அவருடைய சிந்தனைக் கயிற்றிலே பல சிக்கல்கள் உண்டாக்கியது.

அந்த விஞ்ஞான தெய்வத்திடம் சிக்கிய சிக்கல்கள் மனிதக் குலத்தை வாழவைக்கும் பல அற்புதங்களாக நடமாடின.

அவருக்குப் பிறகு எத்தனையோ பிற்கால விஞ்ஞானச் சிக்கல்களை அவிழ்த்திடும் சிந்தனைக் கருவிகளாகவும் அவை சிறந்து விளங்கின.

இவ்வாறு, இந்த இரண்டு பழங்களின் சிக்கல்கள் உலகில் இருபெரும் வெவ்வேறு ஆய்வுச் சிந்தனைகளை உருவாக்கி, அற்புதச் சுவைகளை அவனிக்கு வழங்கும் காலக் கொடை அறிவு விருந்தாக அமைந்துள்ளன.