பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சூரியன் - பூமி, சிக்கல்

எகிப்து நாட்டில் டாலெமி எனும் புகழ்பெற்ற வான நூல் வல்லார் ஒருவர் இருந்தார். அவர், பூமி அசையாமல் ஒர் இடத்திலேயே நிலையாக இருக்கிறது என்பதை முதன் முதல் தன் ஆராய்ச்சி மூலம் கூறினார்.

டாலெமியின் விஞ்ஞானச் சிந்தனையை எதிர்த்தார் - கிரேக்க அறிவியல் நிபுணரான அரிஸ்டாட்டில் என்பவர்.

அவர்தான்், தற்கால விஞ்ஞான சிந்தனைக்கு முதன் முதல் ஆணிவேர் போல் விளங்கினார்.

கதிரவன்தான்் உலகத்தின் நடுநிலை. அதுவே, அதன் கேந்திர்த்தில் உள்ளது என்ற கருத்தை, அந்த காலத்திலேயே துணிகரமாக அறிவித்த அறிவியல் ஆற்றலாளர்.

அரிஸ்ட்டார்க்கஸ் கூறிய வானியல் கருத்து, ஏதோ புதுமையாகவும், புரட்சியாகவும், நம்ப முடியாததாகவும், விசித்திரமாகவும், விபரீதமாகவும் விளங்கியதால் அவர் கருத்தை மக்கள் உட்பட எல்லாருமே அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

உண்மையை உலகுக்கு உரைத்த விஞ்ஞான மேதை கலீலியோவை, மதவெறியர்கள் வழக்கு மன்றத்திலே வலிய இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி, அவரை மன்னிப்புக் கேட்குமாறு செய்ததற்கு டாலமி கூறிய விஞ்ஞானக் கருத்தே காரணமாகும்.