பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器窑 விஞ்ஞானச் சிக்கல்கள்

கி.பி.1473 - ஆம் ஆண்டில், போலந்து நாட்டு விஞ்ஞானப் பேரறிஞர் நிக்கலேயஸ் கோப்பர் நிக்கஸ் பிறக்கும் வரை, சுமார் 1540 ஆண்டுகளாக எகிப்து விஞ்ஞானியான டாலமி கூறிவந்த கருத்துதான்் மதத் துறையிலும் சரி, அரசியல் துறையிலும் சரி, பேராதிக்கம் செலுத்தி வந்தது.

அறிவியல் அறிஞரான நிக்கலேயஸ் கோப்பெர்நிக்கஸ் விஞ்ஞானத் துறையில் ஒரு மாபெரும் புரட்சியைச் செய்தார்.

சூரியனே நடுநிலை, பூமி என்பது ஒரு கோள். சூரியனைச் சுற்றி அது ஒடி வருகிறது என்பதே அந்த வித்தகன் செய்த அறிவியல் புரட்சியாகும்.

இந்த அறிவுப் புரட்சிக்கான விவரங்களை எல்லாம் ஒன்று திரட்டி அவற்றிற்கான விளக்கங்களை ஒழுங்காக எழுதி, அந்தப் புத்தகங்களுக்கு 'ரிவல்யூவின்ஸ்' என்றே பெயரிட்டு வெளியிட்டிருக்கிறார் கோப்பர்நிக்கஸ்.

அரும்பாடுபட்டு தான்் எழுதிய அந்த அரிய நூல், புத்தகமாக வெளிவந்து புரட்சியை உருவாக்கிய போது, அந்த அறிவியல் அற்புதன் சித்தப் பிரமை பிடித்த மனிதராக நடமாடினார், பாவம்!

சூரியனே நடுநிலை. பூமி என்பது ஒரு கோள். அது, சூரியனைச் சுற்றி ஒடி வருகிறது என்ற புரட்சிக் கருத்தை, முதன்முதல் வெளியிட்டவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த அரிஸ்ட்டார்க்கரஸ் என்பவர் ஆவார்.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் கூறியதால், அக்கால மக்களுக்கு அந்த கண்டு