பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 仁蟹然 பிடிப்பின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது.

அதனால், அவரது அரிய விஞ்ஞான உழைப்பை மதிக்கவே மறுத்தார்கள் மக்கள்.

அவரது ஆய்வின் உண்மை என்ன என்பதையே, உலகு - உணர மறுத்து விட்டது.

கோப்பர்நிக்கஸ் என்ற போலந்து நாட்டு அறிவியல் ஆற்றலாளர், அரிஸ்ட்டார்க்கரஸ் கருத்தையே பின்பற்றி, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அதை நிருபித்துக் காட்டினார்.

இக்கால மக்கள் அதை ஒரளவு ஒப்புக் கொண்டு அவரது கருத்தைக் கவனிக்க முனைந்தனர்.

இவர்களுக்கு இடையே எழுந்த சிந்தனைக் சிக்கலால், உலகு ஒர் உண்மையைப் பெற முடிந்தது. அந்த உண்மையை கோப்பர்நிக்கஸ் மெய்பித்துக் காட்டியதால், அவர் மேதினியின் பாராட்டுதலை இன்றும் பெற்று வருகிறார்.

கிரேக்க நாட்டு மருத்துவத்துறை மாமன்னனாக விளங்கிய க்ேலென் கி.பி.140-ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 200 - ஆம் ஆண்டுவரையுள்ள இடைப்பட்டக் காலத்தில் வியத்தகு ஆராய்ச்சிகளை மருத்துவ உலகிலே உருவாக்கிக் காட்டினார்.

மனித உடல் இயக்கத்தைப் பற்றி அவர்

ஆராய்ந்து அறிவித்தக் கருத்துக்களே ஏறக்குறைய 1300 ஆண்டு காலமாக மருத்துவத் துறையில்

பேராதிக்கம் செலுத்தி வந்தது.

கேலேன் கண்டுபிடித்துக் கூறிய சிந்தனைஎன்ற வாக்கே, மருத்துவ உலகிலும் - மக்களி