பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

簽體 விஞ்ஞானச் சிக்கல்கள் டையிலும் வேத வாக்காக மதிக்கப்பட்டு வந்தது.

அவரது ஆய்வுக் கருத்துகளை யாராவது மறுத்துக் கூறினால், ஒன்று அவர்கள் பழி வாங்கப்படுவார்கள் - அல்லது, கோலென் கால ஆராய்ச்சியின் போதி ருந்த மனித உடலமைப்பு இப்போது மாறிவிட்டது என்ற சமாதான்த்தைக் கூறி, அந்த மாமேதையின் புகழுக்கு வாழ்த்துப் பாடி வந்தார்கள் - அப்போதைய விஞ்ஞானத் துறை வித்தகர்கள்.

இந்த நேரத்தில், ப்ரசெல்ஸ் நகரில் கி.பி. 1514 - ஆம் ஆண்டில், ஆண்ட்ரியஸ் வெசேலியஸ் என்ற மருத்துவத் துறை அறிஞர் ஒருவர் தோன்றினார்.

அவர், கேவென் ஆராய்ந்து கூறிய உடலியல் கூறு கருத்துக்களில் எவையெவை தவறானவையோ, அவற்றை பகிரங்கமாகவே மறுத்தும் வந்தார் - எதிர்த்தும் வந்தார்.

கேலென் மீது மக்களும் மருத்துவ வித்தகர்களும் வைத்திருந்த ஆதிக்கப் புகழின் ஆணிவேரை அறுத்திடப் போராடினார். பொறாமையால் அல்ல - ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளால்!

கேலென் சிந்தனைகளை அவர் வெளிப்படை யாகவே எதிர்த்ததால், பாடுவா பல்கலைக் கழகத்தில் அவர் செய்து வந்த பேராசிரியர் வேலையிலே இருந்து நீக்கப்பட்டார்.

இவ்வளவுக்கும் காரணம், கேலெனுக்கும் வெசேலியசுக்கும் இடையே இருந்த உண்மையான - உலகுக்குத் தேவையான சிந்தனைச் சிக்கல் களேயாகும்.