பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 鲁露7 இத்தாலி நாட்டின் விஞ்ஞான மேதையாக விளங்கிய கலிலியோ சிறந்த கணித விற்பன்னர், வான நூல் நிபுணர் - அற்புதமான விஞ்ஞான மேதை - சீரிய ஆராய்ச்சி அறிஞராவார்.

கி.மு. 384 - ஆம் ஆண்டில் வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர்களிலே ஒருவரான அரிஸ்டாட்டில் கூறிய இயக்க விதிகள் சிலவற்றை, சிந்தனையாளர் கலிலியோ பகிரங்கமாகவே குறை கூறினார்! எதிர்த்தார்!

தக்க ஆதாரப் பூர்வமான ஆராய்ச்சிகள் மூலம் அரிஸ்டாட்டில் கருத்துகளை அறிஞரெல்லாம் அறியும் வகையிலே அவர் பலமாக மறுத்தார்.

'சருகும் கல்லும் தரையில் வந்து விழுவதை அரிஸ்டாட்டில் கண்டார். பளுவுள்ள பொருள்கள் கீழே விழுவதை விட, இலேசான பொருள்கள் மெதுவாகவே கீழே விழுகின்றன” என்று அவர் கண்டு அறிவித்தார்.

அதாவது, பளுமிக்கப் பொருள்கள் எல்லாம், பளுக் குறைந்த இலேசானப் பொருள்களைவிட வேகமாக விழும் தன்மை உள்ளன என்ற முடிவை அவர் உலகுக்கு கூறினார்.

எடுத்துக் காட்டாக 'இரண்டு பவுண்டு படிக்கல் கீழேவிழும்போது, ஒரு பவுண்டு படிக்கல் விழுவதைப் போல் இரண்டு மடங்கு வேகமாக விழும் என்பது அவரது வாதம்.

அறிவியல் மேதையான கலிலியோ அரிஸ்டாட்

டில் வாதத்தை மறுத்தார் - தவறு என்று எடுத்துக் காட்டினார்.