பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器瓣 விஞ்ஞானச் சிக்கல்கள்

உண்மையில், கல் கீழே விழுவதைவிட் மெதுவாக இலை கீழே விழுவதில்லை, இலை மெதுவாகத் தரையில் வந்து சேரக் காரணம் காற்றினால் ஏற்படும் தடையே ஆகும்.

'அரிஸ்டாட்டில், இப்படிப்பட்ட தடை ஒன்று இருப்பதைக் கவனிக்க மறந்து விட்டார். தருக்க முறைப்படி அது சரியானதாகத் தோன்றலாம்.”

'அதனால், அந்த வாதமே உண்மையல்ல. காற்றி னால் ஏற்படும் தடையைக் கவனிக்காமல் விட்டு விட்டால், பளுவான பொருட்களும் இலேசான பொருட்களும் ஒரே விகிதத்தில் தான்் கீழ் நோக்கி விழுகின்றன.”

எனவே, அரிஸ்டாட்டிலின் சிந்தனை தவறான அடிப்படையிலே அமைந்தவை என்று மிக வன்மையாகவே கலிலியோ எதிர்த்தார்.

விஞ்ஞான உலகுக்கு அரிய பல பணிகளைத் தனது ஆராய்ச்சிகள் மூலம் வழங்கிய மாமேதை அரிஸ்டாட்டிலுக்கும், மாபெரும் அறிவியல் வித்தகராக விளங்கிய கலிலியோவுக்கும் இடையே ஏற்பட்ட சிந்தனைச் சிக்கல்களால் உலகம் பல உண்மைகளை உணர்ந்தது.

'நோயாளிகளின் நாடித் துடிப்பு விகிதத்தை ஒர் ஊசவியின் இயக்கத்தால் அளந்து கணக்கிடலாம்' என்று அறிவியல் சிந்தனையாளரான கலிலியோ கண்டுபிடித்துக் கூறினார்.

அது போலவே, அதே ஊசலின் இயக்கத்தால் காலத்தை அளக்கும் கடிகாரத்தை அமைக்கலாம்” என்றும் திட்டம் தந்தார்.