பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி D89 அறிவியல் ஞானியான கலிலியோ சிந்தனையை அவருக்குப் பின் வந்த கிறிஸ்டியன்ஸ் ஐகென்ஸ் என்ற விஞ்ஞான அறிஞர் முழுக்க முழுக்கப் பின் பற்றினார்.

காலத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் கருவியாக அவர் ஊசலியைக் கண்டுபிடித்தார். அதன் எதிரொலியாகக் காலத்தைத் திருத்தமாகக் காட்டும் கடிகாரத்தை முதன் முதல் கண்டுபிடித்துக் காட்டி கலிலியோ சிந்தனைச் சிக்கலுக்கு வடிவம் கண்டார்.

கலிலியோவின் அற்புத சிந்தனையாற்றல்களிலே சில, அவருக்குப் பின்னாலே வந்த நியூட்டன், ஐன்ஸ்டின் போன்ற மேதைகளுக்கு உண்டான சிந்தனைச் சிக்கல்களை அவிழ்த்திட உதவியாக அமைந்தன.

கிரேக்க வானியல் அறிஞர் டாலமிக்கு ஆதரவாக கி.பி. 1592 -ம் ஆண்டில் டென்மார்க்கு நாட்டு விஞ்ஞான ஆய்வாளரான டைக்கோ ப்ரா என்பவர் போராடினார்.

பூமிதான்் ஓரிடத்தில் அசையாமல் இருக்கிறது என்ற டாலமிக் கருத்தைப் ப்ரா பலமாக ஆதரித்தார்.

கோப்பர் நிக்கஸ் கூறும், சூரியன்தான்் உலகின் நடுநிலை. என்ற கருத்தை நாம் ஏற்றால், கடவுள் நியமித்த விதிகளுக்கும், பெளதிக இயலின் கோட்பாடுகளுக்கும் எதிரானவற்றை ஏற்றதாக ஆகிவிடும் - அவற்றை மீறிய கொள்கைகளாக இருக்கும். என்று பகிரங்கமாகவே கூறி ப்ரா விஞ்ஞான உலகில் போராடினார்.

அக்கால மதவெறியர்களும், ஆதிக்க வெறி பிடித்த