பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豎證體 விஞ்ஞானச் சிக்கல்கள் மன்னர்களும் ப்ரா சிந்தனையை இரு கையேந்தி வரவேற்றார்கள்.

வானவியல் அறிஞராக விளங்கிய டைக்கோ ப்ரா எழுப்பிய இந்த சிந்தனைச் சிக்கலை, ஜெர்மனியிலே பிறந்த அறிவியல் மேதை கெப்ளர் கடுமையாக எதிர்த்தார்.

கோப்பர்நிக்கஸ் கொள்கைதான்் என் கோட்பாடு - அதுதான்் அறிவியல் என்று கூறி, ப்ராவின் வாதங்களைத் தவிடு பொடியாக்கி வாதாடினார்.

கோப்பர் நிக்கஸ் கொள்கையைக் கூட அக்கால மக்கள் வெறுத்தனர்.அதைக் கண்ட கெப்ளர் வேறொரு கோட்பாட்டை வெளியிட்டார்.

கண் பார்வை கெட்டு ஊனமாக இருந்த கெப்ளர்தான்், கோள்கள் கோழி முட்டை வடிவமான நீள் பாதையில் ஒடுவதைக் கண்டு பிடித்தார்.சூரியனைச் சுற்றி ஒரு கோள் ஒடி வர எவ்வளவு நேரமாகிறது என்பதையும் அறிந்து கூறினார்.

சற்றே முடமான கைகளுடைய கெப்ளர்தான்், ஒவ்வொரு கோளும் ஒடி வரும் போது, அதனதன் இடத்திற்கேற்ப வெவ்வேறு வேகத்தோடு ஒடி வருவதையும் ஆராய்ந்து பார்த்தார்.

இத்தகைய வானியல் உண்மைகளை துருவித் துருவி ஆராய்ந்த அவர், மத எதிர்ப்புக்கு அடிக்கடி ஆளாகி ஊருக்கு ஊர் நாடோடியாக சுற்றிச் சுற்றி அலைந்து வாழ்ந்தார்.

சூரியனுக்கு ஆண்மையிலுள்ள கோள்கள் சுற்றிவர ஆகும் நேரம், சூரியனிடமிருந்து வெகு