பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 亡伊势蟹 தொலைவிலுள்ள கோள்கள் சுற்றிவரும் நேரத்தைக் காட்டிலும் குறைவு என்பதைக் கண்க்கிட்டு அறிவித்தார்.

ஒவ்வொரு கோளையும் தனித் தனியாக எடுத்துக் கொண்டு, மேற்கூறிய கணித விதிகள் அவற்றிற்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதைச் சரியான கணக்கோடு கெப்ளர் போட்டுப் பார்த்தார்.

இந்தச் சிந்தனைச் சிக்கல்கள், அவருக்குப் பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துப் பிறந்த சர் ஐசக் நியூட்டனின் விஞ்ஞானச் சிக்கல்களை அவிழ்த்திட உதவின.

வயோதிகக் காலத்தில் கண் குருடாகி விட்ட சிந்தனையாளர் கலிலியோவுக்கு உதவியாக இருந்தவர், எவாஞ்ஜெலிஸ்ட்டா டாரீச்செல்லி என்பவர். அவர் காலிலியோவின் சிந்தனைச் சிக்கல்களை நன்றாக ஊன்றிக் கவனித்தார்.

'இயற்கை வெற்றிடத்தை வெறுக்கும் என்று கூறிய மாபெரும் விஞ்ஞானியான அரிஸ்டாட் டிலின் சிந்தனைச் சிக்கலை அவர் அவிழ்த்துக் காட்டினார்.

அவ்வாறு ஆராய்ந்து கூறுவதற்கு கலிலியோவின் விஞ்ஞானச் சிக்கல்களில் சில அவருக்கு உதவின.

அதனால், ஒவ்வொரு பொருளும் உள்ள வெற்றிடங்களை அவர் கண்டு பிடித்துக் கூறினார்.

இராபர்ட் பாய்ல் என்பவர், ஒரு வாயுவின் கன அளவு தன் அழுத்தத்துக்குத் தலைகீழ் விதமாக இருக்கும் என்ற அருமையான விஞ்ஞான விதியை உருவாக்கினார்.