பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

劳2靛 விஞ்ஞானச் சிக்கல்கள்

ஒரு பொருள் இழுத்தத்துக்கு உட்படும்போது அதைச் சுற்றியுள்ள வாயுக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன. என்ற அருமையான விஞ்ஞான சிக்கல்களை பாய்ல் கண்டறிந்தபோது, மேற்கண்ட கணிதத் தத்துவத்தைக் கணக்கிட்டு உலகுக்கு உணர்த்தினார்.

இராபர்ட் பாய்ல் அவிழ்த்த விஞ்ஞானச் சிக்கலிலே, மேலும், ஒரு சிக்கல் விழுந்திருப்பதை அவர் உணரத் தவறி விட்டார்.

அந்த மற்றொருச் சிக்கலை நன்கு கவனித்து, அதன் விதி முறைகளை ஒழுங்காக ஆராய்ந்து பாய்ல் கூறியதோடு, வெப்ப நிலை மாறாமல் இருக்குமானால் என்ற வாசகத்தைச் சேர்த்து மற்றொரு விஞ்ஞானியான ஷாக்கு சார்லஸ் என்பவர் அந்த சிக்கலை அவிழ்த்தார்.

சிந்தனைச் சிங்கமான கவிலியோவின் வானியல் தொலை நோக்கிக் கருவியின் சிந்தனை, வானவெளியை நோக்கி ஊடுருவியதால் அவருக்கு அங்கே பல விஞ்ஞானச் சிக்கல்கள் தென்பட்டன.

அதே டெலிஸ்கோப் மூலம், ஆண்ட்டன் வான் லேவன் ஹூக் என்பவர், தாம் படைத்த கண்ணாடி லென்சுகளால் நுண்ணுயிர் உலகை நோக்கித் திருப்பிப் பார்த்தார். அவருக்குப் பல அறிவியல் சிக்கல்கள் அதன் வாயிலாக தெரிந்தன.

சிந்தனையாளர் கலிலியோவின் டெல்லெஸ் கோப் சிந்தனையால் ஏற்பட்ட அடிப்படை உணர்வுகளே, லேவன் ஹாக்குக்கும் ஏற்பட்ட சிக்கல்களாக அமைந்தன.