பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

விஞ்ஞானத்தின் கதை

இருந்த மரம், செடிகளிலிருந்து முழுப்பயனை அடைந்தபின் ஒரு தேக்கம் ஏற்பட்டது. உணவு எளிதில் கிடைப்பதாக இல்லை. இதற்குள் மீண்டும் புதியதோர் அனுபவம் எதிர்ப்பட்டது. என்றோ ஒருநாள் கனியைத் தின்று விட்டுக் கொட்டையைக் கீழே எறிந்த இடத்தில் முளை விட்டுக் கிளம்பிப் பசுமையான செடிகள் உருவானதை மனிதன் கண்டான். அச்செடியை நன்றாகப் பாதுகாத்தால் பின்னாளில் நல்ல பயன் தரும் என்று தெரிந்தான். அதுவும் தவிரத் தானாகவே வேட்கை கொண்டு சில விதைகளை மண்ணில் புதைத்துப் பாதுகாத்தான்.அவை முளை விட்டன.

உலகின் முதல் வேளாண்மை இப்படி உருவம் பெற்றது. இதுவே மனிதனின் முதல் அரிய செயல் பெருமைமிக்க ஆராய்ச்சி. இந்த வேளாண்மை ஆராய்ச்சியால் மனிதன் துணைவர்களோடு இடம் விட்டு இடம் பெயர்ந்து நிலையற்று வாழாமல் குறிப்பிட்ட இடத்தில் நிலைத்துத் தனக்கு வேண்டிய உணவு தரும் பயிர்களை வளர்க்க முனைந்தான். இப்படி மனிதன் நாடோடி வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நிலையான வாழ்க்கையில் தன்னைப் பிணைத்துக் கொண்டான்.

இதே நிலையில்தான் உலகிலுள்ள பெரிய ஆறுகளின் ஓரங்களில் வேளாண்மை தொடங்கிற்று. ஒன்றைக் கவனித்து மற்றவை கற்றுக் கொண்டனவா, அன்றித் தமக்குத் தாமே அனுபவம் மூலமாகக் கற்றுக் கொண்டனவா என்று தெளிவாகச் சொல்வதற்கில்லை. அத்தகைய ஆறுகளில் முக்கியமானவை இராக் நாட்டைச் சேர்ந்த யூப்ரடீஸ்—டைகிரீஸ், இந்தியாவைச்