பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேளாண்மை

19

சேர்ந்த சிந்து-கங்கை, சீனத்தைச் சேர்ந்த யாங்ஸ்டிகியாங்— ஹ்வாங்ஹோ ஆகும்.

பிற ஆறுகளைவிட நைல் குறிப்பிடத்தக்கது. அதன் கரைகளில் குடியேறியவர்களுக்கு வேளாண்மைக்கென்று அதிகச் சிரமம் ஏற்படவில்லை. எப்போதும் ஆற்றில் நீர் நிரம்பி இருந்தது. அடிக்கடி கரை வழிந்து நிலப்பகுதிகளில் நீர்ப்பாய்ச்சல் ஏற்பட்டது. அத்தகைய நீர்ப்பாய்ச்சலால் அபிசீனிய நிலப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட வண்டல் மண் தாவர வளர்ச்சிக்கு அதிகப்படியான ஊட்டம் கொடுத்து நிலத்தை எப்போதும் வளம் கொண்டதாக இருக்க உதவியது. வண்டல் மண்ணின் பெருமை முதலில் அங்கு வசித்தவர்களுக்குத் தெரியவில்லை. ஆற்றின் கரையிலிருந்து வெகு தூரத்திலிருந்த நிலப் பகுதிகளில் வேளாண்மை தொடர்ந்து நடக்கவில்லை. ஆற்றுநீர் நேரடியாக அங்குப் பாயமுடியாத காரணம் ஒன்று. எனவே மழை நீரை மட்டுமே எதிர்பார்த்து அதை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை நடைபெற்றது. ஒரு முறை வேளாண்மை நடந்ததால் நிலம் களைத்துவிட்டது மற்றொரு காரணம். நிலம் ஏன் களைப்படைந்தது, அதை எப்படித் தவிர்க்கலாம் என்று மனிதன் சிந்தனை செய்த போதுதான் விஞ்ஞானத்தின் உதவி கிடைத்தது.

ஆற்றிலிருந்து தொ லைவிலுள்ள நிலப்பகுதிக்குத் தண்ணீர் கொண்டு செல்ல வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. தாழ்வான நீர் நிலையிலிருந்து மேடாக இருந்த நிலப் பகுதிக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு போகத் தேவை ஏற்பட்டது; நீர் ஏற்றங்கள் தோற்றம்