பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

விஞ்ஞானத்தின் கதை

வேளாண்மை சம்பந்தப்பட்ட பயிற்சிகள் அனைத்தும் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் கையாளப்பட்டன. இரசாயனம் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கும் இந்நாளில் எவ்வகைச் சத்துக்கள் நிலத்திலிருந்து தாவரங்களுக்குத் தேவையென்றும், குறைந்திருக்கும் சத்தை எவ்வாறு சேர்க்கலாமென்றும் இரசாயன வாதிகளால் நிலத்தை வளப்படுத்தத் ஆராயப்பட்டிருக்கின்றன. தேவையான சத்துப் பொருட்கள் மாட்டுச் சாணத்திலும் மக்கிய இலைகளிலும் அதிகம் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள். இப்படி அடிப்படை உண்மைகளை இயற்கையிலிருந்து கற்றுக்கொண்ட விஞ்ஞானிகள் தாமே உயரிய உரங்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் மிக்கவர்களாக இன்று விளங்குகிறார்கள். வேளாண்மைத் துறையை முன்னேற்றமடையச் செய்ய, அதற்கான விஞ்ஞானிகளை உருவாக்க, உலகின் பல்வேறு பகுதிகளில் வேளாண்மைத் துறைக் கல்லூரிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முயற்சிகளின் விளைவாக இன்றைய வேளாண்மை மிக விரைவாக நடைபெறுகிறது; குறைந்த முயற்சியில் மிகுந்த பயன் கிடைக்கிறது. அதற்கான பலவித இயுந்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. விதைப்புக்கு ஒன்று, நீர்ப்பாசனத்திற்கு ஒன்று, அறுவடைக்கு ஒன்று—இப்படி எத்தனையோ! அறுவடையின்போதே உமி நீக்கித் தானியங்களை மூட்டை கட்டி உழவனுக்கு வேலையை வெகுவாகக் குறைக்கும் இயந்திரங்களும் உண்டு. இவை மனித சாதனையின் உச்சங்களாக விளங்குகின்றன.

உழவன் என்றும் வானத்தையே நம்பி வாழ வேண்டி யிருக்கிறது. விதைப்புக் காலத்திலிருந்து அறுவடைக்காலம்