பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் கிராமம்

29

தான் அளவையின் பிறப்பு ஏற்பட்டது. முதலில் பெரிய அளவை, அடுத்து அதைவிடச் சிறியது... ..... இப்படி அளவைகள் தொடர்ந்து பெருகியிருக்கவேண்டும். எண்ணிக்கையும், அளவையும் உலகில் நாகரிகத்தை வேகமாகப் பரவச் செய்தன.

அருகருகே அமைந்திருந்த கிராமங்களில் விளைந்த உணவுப்பொருளைத் தேக்கிவைத்தனர். பின்னர் அவை யாவும் குறிப்பிட்டதொரு கிராமத்தை அடைந்தன. காலக்கிரமத்தில் உணவுப் பரிமாற்றம் முழுவதும் அக்கிராமத்தில் நடைபெற வேண்டிய சூழ்நிலை அமைந்தது. நாகரிகம் பெருகப்பெருக அக்கிராமத்தின் முக்கியத்துவம் அதிகமாகி அது நகரம் என்ற பெயர் பெற்றது. நகரம் என்பது நாகரிகத்தின் உயிர் எனப் பொருள்படும்.

சேமித்து வைக்கப்பட்ட உணவையும், உணவுப் பரிமாற்றத்தையும் கவனிக்கத் தனிப்பட்டதொரு குழு அமைக்கப்பட்டது. அதற்குத் தலைவன் ஏற்பட்டு அரசன் எனப் பெயர் பெற்ருன். இம் மாற்றத்தைப் பிணைத்தபடிச் சில சட்ட திட்டங்கள் உருவாயின.

குழுக்கள் ஒழுங்குற இயங்க அரசனே காரண மானவனுய் இருந்தான். தவறு நடக்குமிடத்து அவற் றைச் சீர்திருத்த அவனுக்கு முழு உரிமை இருந்தது. அத்தகைய சட்டங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.

1. ஒரு மனிதன் இன்னொருவனுடைய கண்ணேப் பழுதாக்கினல் அவர்கள் (சட்டக் குழுவினர்) துன்புறுத்தியவனின் கண்ணைப் பழுதாக்கலாம். அல்லது குறிப்பிட்ட அளவுடையதொரு வெள்ளிக் கட்டியைக் கொடுத்து ஈடுகட்டலாம்.