பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

விஞ்ஞானத்தின் கதை

உணவு விளைச்சலைப் பெற்றிருக்கலாம். எனவே ஏதேனும் ஓர் உடன்படிக்கையின்படி ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு உணவுப் பரிமாற்றம் நடந்திருக்க வேண்டும்.

இந்த நிலையில்தான் அளவைகளும் எண்ணிக்கையும் தோன்றின. உணவுப் பரிமாற்றம் கூடைக் கணக்காகவோ, கைப் பிடிக் கணக்காகவோ நிகழ்ந்ததாக முதலில் கொள்ள வேண்டும். எத்தனைக் கூடை உணவுப் பொருள் கிராமங்களுக்கிடையே பரிமாறப்பட்டன என்று கணக்கிட முதலில் ஒவ்வொரு நேர்கோடாகக் கற்களில் செதுக்கப்பட்டனவாம். இம் முறையைப் பின்பற்றியே உரோமானிய எண்கள் I, II, III..... என்று குறிக்கப் பட்டதாகக் கருத இடமிருக்கிறது. இந்த நிலைக்கு அடுத்து எண்களால் கணக்கிட மனிதன் தன் கைகளையே உதவிக்கு நாடினான். தன் இரு கை களிலும் இருந்த பத்து விரல்களும் முதல் பத்து எண்ணிக்கையாக அமைந்தன. பத்துக்கு மேற்பட்ட எண்களை எண்ணத் தொடங்கியபோது அவன் அம்முறையையே பின்பற்றி பத்தோடு ஒன்று, பத்தோடு இரண்டு என்று எண்ணியிருக்கவேண்டும். கைவிரல்கள் பத்தின் அடிப்படையில் தசாம்ச முறை எண்ணிக்கை தொடங்கியது.

இத்தகைய அனுபவத்தின்போது ஒரு கூடையளவுக்குக் குறைவான தானியத்தையும் அவன் கூடையில் நிரப்பிப் பரிமாற வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கலாம் அல்லவா? அப்படியானால் அக்குறையை அல்லது கூடையில் இருந்த திட்டவட்டமற்ற தானியத்தை எப்படிக் கணக்கிடுவது? இந்தக் கேள்வி எழுந்தபோது