பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் கிராமம்

27

ஒவ்வொரு குழுவும் ஆற்றோரங்களில் வெவ்வேறு நிலப் பகுதிகளில் வாழ்ந்து தங்களுக்குவேண்டிய குடியிருப்பு வசதிகளைச் செய்துகொண்டது. இத்தகைய கூட்டு முயற்சியால் வேளாண்மைத் தொழில் முன்னேற்றம் பெற்று மனிதனால் வயிற்றுக் கவலையைச் சற்று மறக்க முடிந்தது.

மாமிச உணவுக்கும் தாவர உணவுக்கும் உள்ள வேற்றுமையை மனிதன் உணர்ந்தான். மாமிச உணவு வேண்டும் நேரத்தில் வேட்டையாடுவதால் கிடைத்து வந்தது. ஆனால் தாவர உணவோ வேண்டும் நேரத்தில்உடனடியாக நிலத்திலிருந்து கிடைக்க முடியாததாக இருந்தது. எனவே தன்னலத்தை முன்னிட்டேனும் தாவர உணவைச் சேமித்து வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒரு பருவத்தில் விளைந்த தானிய மணியை அடுத்த பருவம் வரையிலேனும் பாதுகாக்க எண்ணிய ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் ஒரு பொது இடத்தில் தானியத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். அதற்கான காவலையும் கட்டுப்பாட்டையும் தங்களுக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு மனித இனத்தில் தனிமை மறையத் தலைப்பட்டுக் கூட்டுச் சூழ்நிலை அமைந்து முதல் கிராமம் உருவாயிற்று. இப்படியே ஆற்றோரங்களில் அங்கங்கே காலக்கிரமத்தில் கிராமங்கள் பெருகின.

ஒரு கிராமத்தில் விளைந்த உணவு அந்தக் கிராமத்தில் இருந்தவரின் தேவைக்குக் குறைந்த அளவில் மட்டுமே கிடைத்திருக்கலாம். அந்தத் தேவையை- நிரப்ப அக்கிராமம் அடுத்த கிராமத்தை நாடும். அடுத்திருந்த கிராமமோ சில அதிகமான வசதிகளால் அதிக