பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேளாண்மை

35

பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் விளைவே உறுதிவாய்ந்த கோட்டை, கொத்தளங்களின் பிறப்பு ஆகும்.

அந்நாட்களுக்குப்பின் கட்டிடக் கலை சிறிது சிறிதாக முன்னேறியது. உறுதி வாய்ந்த கட்டிடங்கள் பல நாகரிகப் பூச்சுடன் இன்று கட்டப்படுகின்றன. உலகத்தின் அதிசயமாக விளங்குவதும், மிக உயரமானதெனக் கருதப்படுவதுமான எகிப்தியப் பிரமிடுகளைக் காட்டிலும் இரு மடங்கு உயரமான கட்டிடங்களை இன்று பல இடங்களில் காண முடிகின்றது. இத்தகைய கட்டிடங்களில் பயன்படுத்தப் படுபவை சிமென்ட், கான்கிரீட் முதலியவையாகும். மணல், சுண்ணாம்பு, சரளைக்கற்கள் முதலியவற்றை விஞ்ஞான நோக்கோடு ஆராய்ந்து கலவை செய்யப்பட்டவையே சிமென்டும் கான்கிரீட்டும். விலையுயர்ந்த உலோகங்களின் இடத்தை நிரப்பிச் செலவை குறைக்க இவை பெரிதும் உதவுகின்றன.

இந்தியாவில் கிராமங்களே அதிகமாக இருப்பதால் மண் வீடுகளே பெரும்பாலும் காணப்படுகின்றன. உலோகங்களைப் போல் மண் வெப்பத்தையோ, குளிரையோ எளிதில் கடத்துவதில்லை. மரம் இத்தன்மைத்தாய் இருப்பினும் எளிதில் மழையாலும் வெயிலாலும் கெடுக்கப்பட்டு விடுகின்றது. மரங்களை அடுத்துச் சுவர்களை எழுப்பச் செங்கற்களை உருவாக்கப்பட்டதைப் போல் வீட்டின் மேற்புறத்தை வேய கூரைக்கு அடுத்து ஓடுகள் உருவாக்கப்பட்டன. ஒரு சிலர் உலோகத்தகடுகளைப் பயன்படுத்தினர். எளிதில் இவை சூட்டைக் கடத்தியபடியால் பின்னர் கல்நார்-சிமென்ட் பழக்கத்திற்கு