பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

விஞ்ஞானத்தின் கதை

வந்திருக்கிறது. இது வெப்பத்தை அரிதில் கடத்துவது மட்டுமல்லாமல் உறுதியாகவும் விளங்குகின்றது.

குளிர் மிகுதியிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவே பெரும்பாலும் வீடு அமைக்கப்பட்டதால் முதலில் சன்னலோ, வேறு சுகாதார அமைப்புக்களோ காணப்படவில்லை. வெயில் காலம் வந்தபோது புழுக்கத்தைத் தடுக்க, காற்றோட்ட வசதிகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு தொடங்கிய சுகாதார முறைகள் படிப்படியாகப் பெருகி இன்று அதிக முன்னேற்றம் பெற்றுள்ளன.

சூழ்நிலை வெப்பத்திலிருந்தும் குளிரிலிருந்தும் தன்னைக் காத்துக்கொள்ள, சரிசெய்யப்பட்ட (Air-conditioned) கட்டிடங்கள் மனிதன் கண்ட சாதனைகளில் ஒன்றாகும். பஞ்ச பூதங்களையும் கிரகங்களையும் அடக்கி ஆளும் திறன் மனிதனுக்கு உண்டு என்பதை இத்தகைய சாதனைகள் எடுத்துக் காட்டுகின்றன.

முன்னேற்றத்தின் கடைசி அறிக்கையாக 'ரெடிமேட் வீடுகள்' விளங்குகின்றன. சமையலறை, படுக்கையறை, கக்கூஸ்.... போன்று வெவ்வேறு பகுதிகள் தனித்தனியே இயந்திர சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. பின்னர் வீடு வேண்டுவோர் நிச்சயித்திருக்கும் நிலப்பகுதிகளுக்கு அந்த தயார் செய்யப்பட்ட வீட்டுப் பகுதிகள் லாரிகள் மூலமாகக்கொண்டு செல்லப் படுகின்றன. அங்குச் சுமைதூக்கி (crane) களின் உதவியால் நிலத்தில் இறக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் ஒன்றோடொன்று லாவகமாக இணைக்கப்படுகின்றன. மின்சார இணைப்பும், தண்ணீர்க் குழாய் இணைப்பும் பின்னர் நடைபெறுகின்றன. எல்லாவிதமான நவீன