பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மானங்காத்த மனிதன்

39

னிட்டு கழுத்துப் பட்டை, இடுப்புப் பகுதி, கால் பகுதி எனப் பல பகுதிகளாக்கப்பட்டு அதே போர்வை நன்கு பயன் படுத்தப்பட்டது. குளிர் நிலப்பகுதியான துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோக்கள் இன்று உபயோகிக்கும் உடையின் தன்மை இதனை நன்கு தெளிவுபடுத்தும்.

அடுத்த நிலையாக இறந்துபட்ட விலங்குகளின் மயிரை முறுக்கி அதை நெய்து உடுத்திக் கொள்ள மனிதன் கற்றான். இத்தகைய நெய்தலுக்கு அடிப்படையாக இருந்தது கூடை பின்னுதலாகும். எண்களும் கணக்கியலும், வேளாண்மைத் துறையினால் முன்னேறியதைப் போல நெய்தல் தொழிலாலும் முன்னேறின. எத்தனை இணுக்குகள் கூடையை முடையத் தேவைப்படுமென்றும், எத்தனை இழைகள் உடையை உருவாக்குமென்றும் எண்கள் கணக்கிடப்பட்டன. கணக்கியலில் புதுத்துறை இத் தொழிலால் பிறந்தது. இன்று வடிவங்களை ஆராயும் க்ஷேத்திர கணிதத்தின் (Geometry) தொடக்கம் இந்த நெய்தல் தொழிலே. எந்தக் கோணத்தில் எந்த வடிவில் இழைகள் நெய்யப்பட்டால் அதிகப் பலன் பெறலாம் என்ற கற்பனை மனிதனின் அறிவைத் தூண்டிவிட்டது.

விலங்குகளின் மயிர்களை முறுக்கி உடை நெய்த நிலையை அடுத்து மனிதன் பருத்தியிலிருந்தும் பயிர் நார்களிலிருந்தும் உடை நெய்யக் கற்றுக் கொண்டான். பருத்தி நூல் உடைகளை உருவாக்குவதில் இந்தியர்களும் பட்டுநூல் உடைகளை உருவாக்குவதில் சீனர்களும் நெடுங்காலத்திற்கு முன்பே சிறந்து விளங்கினர். இந்த இரு நாட்டவர்களே முதலில் நெய்யும் தொழிலை