பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

விஞ்ஞானத்தின் கதை

உலகுக்கு அறிமுகப் படுத்தியவர்கள். இங்கிலாந்தில் தொழிற் புரட்சி ஏற்படும் வரையிலும் அந்நாட்டு உடைகளை நெய்ய இந்தியாவிலிருந்துதான் பருத்தி கொண்டு போகப் பட்டது.

சமுதாய வளர்ச்சியில் வேளாண்மை எவ்வாறு பங்கு கொண்டதோ அவ்வாறே உடையின் பெருக்கமும் பங்கு கொண்டிருக்கிறது. பற்பல இடங்களில் நெய்யப்பட்ட உடைகளைக் குறைவான விலைக்கு வாங்கி அதிகமான விலைக்கு விற்க சந்தைகள் அங்கங்கே உருவாயின. வாணிபத்தில் போட்டி ஏற்படுதல் தன்மையாதலின் பூசல்கள் கிளம்பின; கட்சி சேர்ந்து சண்டைகளும் நிகழ்ந்தன. பின்னர் வாணிபத்தின் வளர்ச்சியை இச்சிறு பூசல்கள் குறுக்கிட்டுத் தடுத்ததை உணர்ந்து வாணிபர்கள் கூட்டுறவுச் சபைகள் அமைத்து விலைகளை நிர்ணயித்து வணிக சட்ட திட்டங்களை வரையறுத்தனர். இதனால் வாணிபத்தில் தேக்கம் ஏற்படாமல் பரவி பிற நாட்டு வாணிபமும் உருவாயிற்று; வெற்றி கண்டது.

கையாலேயே நூற்பதும் நெய்வதுமான நிலைக்கு அடுத்த நிலையாக மனிதன் முன்னேற்றம் காண விஞ்ஞானம் துணைக்கு வந்தது. கைராட்டையும் கைத்தறியும் இந்தப் பாதையில் அறிவியலின் முதல் குழந்தைகளாகத் தோன்றின. இவை இரண்டும் இந்தியரால் கண்டு பிடிக்கப்பட்டவை. இம் முறைகளை அறிமுகப் படுத்திக்கொண்ட மற்றைய நாடுகள் பின்னர் அறிவியலின் வேக வளர்ச்சியால் அருவி நீரின் வளர்ச்சியாலும், ஆற்று நீர் ஓட்டத்தினாலும் இயந்திரங்களாக மாற்றும் முறையைக் கண்டன. நீராவி இயந்திரத்தைக்