பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

விஞ்ஞானத்தின் கதை

நன்கு வேக வைக்கப்பட்டு, கூழாக்கப் படவேண்டும். அடுத்து, தேவைப்படும் இரசாயனப் பொருட்களை அதனோடு சேர்க்க வேண்டும். இயந்திரத்தின் உதவியால் பட்டுப் பூச்சி தயாரிப்பதைப் போல் மெல்லிய இழைகள் நூற்கப்படுகின்றன. இதில் இன்னொரு விந்தை என்னவெனில் இயற்கைப் பட்டைவிட செயற்கைப் பட்டு உறுதி வாய்ந்ததாக உள்ளது.

கண்ணாடி நூலினாலும் உலோக நூலினாலும் தற்போது உடைகள் தயாரிக்கப் படுகின்றன. அலுமினிய உலோகம் இவ்வாறு பயன்படுகிறது. பிளாஸ்டிக் உடைகளின் உதவி நாம் அறிந்ததே. இது நீரில் நனையாது; தீயில் பொசுங்காது. இவற்றினால் விஞ்ஞானியின் மேதைத் தன்மையினை நாம் நன்கு அறியமுடிகின்றது. இயற்கை காட்டிய வழியே நடந்து கொண்டிருந்த மனிதன், இயற்கையை அனுசரித்துத் தன் பாதையை அமைத்து வாழ்ந்த மனிதன், இன்று இயற்கை பொய்த்தாலும் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு விட்டானே!


————