பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நோயற்ற வாழ்வு

45

பரந்த கல்வி, அனுபவங்கள் வழியே மனிதன் கற்றுக் கொண்ட பாடம்—அறிவின் எல்லைக் கோடு என்றும் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதாகும்.

அசுத்தத்தின் சுரங்கம் இந்த உடல் என்று கூறப்படுகிறது. உரிய நோக்கின்படி கண்டால் இக் கூற்று கற்பனை அல்லவே! உடல் இதைத் தவிர வேறில்லை என்று தெளிந்தால் அதற்கேன் இத்தனை பராமரிப்பு? அசுத்தச் சுரங்கம் எனப்படும் இவ்வுடல் பயன்படுத்தப்பட அது தூய்மையாக்கப்பட்டு ஒழுங்கு நிலையில் வைக்கப்பட வேண்டும். விலையுயர்ந்த வைரக் கற்களும், தங்கமும் சாதாரண மண்ணிடையே கலந்திருக்கின்றன. மண்ணின் அடியில் தங்கமும், வைரக் கற்களும் தென்படுவதை அறிந்த மனிதன் கோடிக் கணக்கில் செலவுசெய்து, விஞ்ஞானமுறையில் முயற்சி செய்து அவற்றை அடைய முயல்கிறான். அதைப் போலவே உடலைப் பேணுவதில் மருத்துவ முறை முயல்கிறது.

மனிதனுக்கும் விலங்குக்கும் மிகுந்த வேற்றுமை உண்டு. இயற்கையின் போக்கிலே விலங்கு வாழ்கிறது. உணவு வகைகளை அது பெரும்பாலும் மாற்றிக் கொள்வதில்லை; உண்ணும் வகைகளில் சோதனைகள் செய்வதும் இல்லை. மனிதனைப் போல அது தேவைக்கு மிஞ்சி எதையும் உண்பதில்லை. எனவேதான் மனிதனை அணுகுவதைப் போல நோய்கள் விலங்கினத்தை அணுகுவதில்லை. மனிதனின் அறிவு நுட்பம், புதியனவற்றை அனுபவிக்கும் ஆர்வம், மேலும் மேலும் முன்னேற வேண்டுமென்ற ஆசை முதலியன மனிதனைச் சில சமயங்களில் வெற்றி கொண்டு அவனைக் கீழே