பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

விஞ்ஞானத்தின் கதை

வீழ்த்தி விடுகின்றன; வேறு சில சமயங்களில் மனிதன் வெற்றிகண்டு புகழ் நாட்டுகிறான். உண்மையைக் கூறினால் மனிதன் புரியும் பல தவறுகளின் கூட்டமே அவன் காணும் வெற்றிப் புன்னகைக்குக் காரணம். இந்த நியதிக்கு உட்பட்டு உடலைப் பற்றிய ஆராய்ச்சியில் மனிதன் முதலில் தவறுகள் செய்து அனுபவப்பட்டு புதுப் புதுப் பாடங்களைக் கற்றிருக்கிறான்.

ஐம்பூதங்களின் சேர்க்கையில் தவறு ஏற்படுவதே நோயின் பிறப்புக்குக் காரணம். இதை ஆதி மனிதன் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. இயற்கைக்கு அஞ்சி அஞ்சிப் பழக்கப்பட்டிருந்த அவன் அசாதாரணச் சக்தி ஒன்றின் அட்டகாசமே நோய்க்குக் காரணம் என்று எண்ணினான்.நோயுற்றவனின் உடம்பில் பேய் புகுந்ததாக அவன் எண்ணினான். இந்த எண்ணத்தின் விளைவாக சாந்தி கழித்தலே நோயைத் தீர்க்கும் மருத்துவமாக அமைந்தது. இதனைச் செய்கின்ற மக்களை இன்றும் காணலாம். உள்ளத்தியலின்படி, பெரும்பாலான நோய்கள் மனத்தில் எழும் சிந்தனைகளைப் பொருத்தே அமைகின்றன. உண்டு என்று நினைத்தால் நம்மை அணுகவும், இல்லை என்று நினைத்தால் நம்மை விட்டு அகலவுமான பண்பு நோய்களுக்கு உண்டு.

மனிதனை அணுகும் ஒவ்வொரு நோயையும் தீர்க்கும் மருந்து வகைகளை ஆராய்வதில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்திருக்கின்றன. அறிவுக்குப் பொருந்தும் வகையில் இந்த ஆராய்ச்சி நடைபெற வேண்டுமானால் உடல் கூறு பற்றித் தெளிவு வேண்டும். உடல் கூறு பற்றிய அறிவு பழங்காலத்தில் சீனர்களிடமும் இந்துக்களிடமும் அதிகம் இருந்தது. அவர்களே இறந்த