பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நோயற்ற வாழ்வு

47

உடல்களை வெட்டி நுண்ணிய ஆராய்ச்சி செய்தவர்கள். மத்திய காலத்தில் அராபியர்கள் இத்துறையில் மிகுந்த ஊக்கம் செலுத்தினர். அதற்குப் பின்னரே மேல் நாடுகளில் மருத்துவத் துறை ஆராய்ச்சிகள் பெருகின. எகிப்து, ஸ்பெயின் நாட்டுக் கலைக் கல்லூரிகளில் இத்தகைய ஆராய்ச்சிக்கு முக்கிய இடம் ஏற்பட்டது.

மருத்துவரின் அன்றைய நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருந்தது. ஒரு நோயாளியைக் குணப்படுத்துவதற்கு முன்னால் மருத்துவர் ஒரு வாக்குத் தர வேண்டும்- நோயாளி எந்தக் காரணத்தை முன்னிட்டும் தீங்கு விளைவிக்கப்பட மாட்டான் என்று. வாக்குக்கு மாறாக நோயாளி குணப்படுத்தப்படாது போவானானால் மருத்துவருக்குத் தண்டனை உண்டு. கண்ணைப் பரிசோதிக்கும்போது கண் குணப்படுத்தப் படவில்லையானால் மருத்துவரின் கண் பழுதாக்கப் படும்; காலில் இரண சிகிச்சை செய்யப்பட்டு அது தோல்வியுறுமானால், மருத்துவரின் கால் பழுதாக்கப்படும். அக்காலத்தில் மருத்துவர்கள் பெரும் பாலும் ஏழைகளைக் கவனிக்காமல் பெருஞ் செல்வர்களுக்கு மட்டுமே மருத்துவம் செய்து வந்ததால் அவர்களுக்கு ஆபத்து இருந்தது. உயிருக்கு உயிர்கூட மருத்துவர்கள் அன்று கொடுக்க நேர்ந்தது.

எனவே தொடக்கத்தில் மருத்துவம் விரைவாக முன்னேறவில்லை. உணவின் மூலமும், நீரின் மூலமுமே பெரும்பாலான நோய்கள் உடலுக்குள் புகுவதை அறிந்த மருத்துவர் நோயாளிகள் உட்கொண்ட உணவிலும் நீரிலும் திருத்தங்கள் செய்தனர். இப்படிப் பலவகையிலும் இன்னற்பட்டுக் கடைசியில் மருத்துவம்