பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலை

55

வாய்மூலம் ஒலி கிளப்பித் தன் எண்ணத்தைப் பிறருக்கு வெளிப்படுத்த எண்ணிய மனிதன் முதலில் தோல்வியுற்று எழுத்தின் உதவியை நாடினான். எழுத்து என்று குறிப்பிடும்போது இன்று நாம் பயன்படுத்தும் எழுத்துக்கள் என்று தவறாக எண்ணக்கூடாது. அன்றைய எழுத்துக்கள் படங்களே; அன்றைய சொற்றொடர் படங்களின் கோர்வையாகும். "மாலையில் இங்கு வா" என்று நண்பனுக்குத் தன் எண்ணத்தை வெளிப்படுத்த விரும்பிய ஒருவன் நடக்கும் மனிதனைப்போன்ற படமும், சூரியன் அஸ்தமிக்கும் படமும் வரைந்து தன் கருத்தை வெளியிட்டான். பழங்குகைகளில் இத்தகைய படங்கள் வரையப் பட்டிருப்பதைக் காணலாம்.

எகிப்தியப் பழங்குடி மக்கள் படம் வரைந்து விளக்குவதில் திறன் பெற்றிருந்தார்கள். ஆறாயிரம், ஏழாயிரம் ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்ட எகிப்தியக் கோவில்களும் பிரமிடுகளும் இவ்வுண்மையைப் புலப்படுத்துகின்றன. மெசபடோமிய மக்கள் களிமண்ணால் சில உருவங்களைச் செய்து அவற்றிற்குக் குறிப்பிட்ட பொருளுண்டென்று ஏற்றுக்கொண்டார்கள். களிமண் கொண்டு செய்யப்பட்ட ஏடுகள் அடங்கிய புத்தகங்களைக்கூட அவர்கள் தயாரித்தார்கள். இந்தியாவில் பனைமரத்து ஓலைகளில் எழுத்துக்கள் எழுதப்பட்டன; கிரேக்க நாட்டில் ஊசி முனைகொண்டு மெழுகு ஏட்டில் எழுதப்பட்டன. பின்னர் காகிதம் செய்யும் முறையைச் சீனர்கள் கண்டுபிடித்தனர். அராபியர்கள் அதைக் கற்று இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப் பாவில் பரப்பினார்கள். தற்பொழுது மரம், புல், மூங்கில், கந்தல் துணி முதலியவற்றிலிருந்து பெருமளவில்