பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

விஞ்ஞானத்தின் கதை

நதியில் எகிப்தியர் செலுத்தித் தங்கள் வாணிபத்தைப் பெருக்கினர். நிலத்தில் விளைந்த பொருள்கள் அடுத்த கிராமங்களுக்கு இப்படித்தான் கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலைக்கு அடுத்து பெரிய மரப்பகுதி ஒன்றின் நடுப்பகுதி குழியாகச் செதுக்கப்பட்டது. ஆற்றின் போக்கில் மட்டும் செல்லாமல் குறுக்கிலும், எதிர்ப்பி லும் செல்ல எண்ணிய மனித சிந்தனையின் விளைவாகத் துடுப்புக்கள் இணைக்கப்பட்டன. ஒரு பொருள் மிதக்க என்ன நிபந்தனை என்று அறிந்ததும் மனிதன் விலங்குகளையே மிதக்கும் பொருட்களாக்கிவிட்டான். அந்த விந்தை எப்படி நிகழ்ந்தது? இறந்த விலங்குகளின் தோல் பகுதி மட்டுமே இருக்க உள்ளிருந்த மற்றப் பகுதிகள் பிரிக்கப்பட்டன. அவை இருந்த இடத்தில் காற்று அடைக்கப்பட்டது. அதிக எடை இல்லாததாலும், காற்று அடைக்கப்பட்டதாலும் ‘படகு மிதந்தது. எந்தப் படகையும் விரைவில்செலுத்த, இயற்கையை நன்கு பயன்படுத்திக் கொள்ள, காற்றைத் தேக்கும் பாய்மரம் சில காலத்திற்குப்பின் படகுகளோடு இணைக்கப்பட்டது.

கி.பி.1705-இல் தாமஸ் நியூகமன் என்பவர் நீராவியினால் இயந்திரங்களை இயக்க முயன்று வெற்றி பெற்றார். இந்த நீராவியின் சக்தியைப் படகில் பொருத்தி ஜான் ஃபிச் என்பவர் கி.பி. 1787-இல் டிலாவேர் என்னும் ஆற்றில் நீராவிப்படகைச் செலுத்தினார். ஆனால் வாணிபத் துறையில் நீராவிப் படகைப் பயன்படுத்தியவர் ராபர்ட் புல்டன் என்பவர். இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வைர வியாபாரி; பிரபல ஓவியருங் கூட. இவர் பாரிசில் வசித்த காலத்தில் ராபர்ட்