பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயணம்

61

ஒழுங்குற வெட்டி அதை சக்கர உருவிற்குக் கொண்டு வந்தான். அத்தகைய இரண்டு சக்கரங்களை இணைத்து வண்டியை உருவாக்கினான். இத்தகைய சக்கர வண்டிகள் மெசபடோமியாவை நோக்கி வந்த சுமெரியர்களால் கண்டு பிடிக்கப் பட்டதெனக் கூறப்படுகிறது. இந்த வண்டியை முதலில் மனிதனே இழுத்தான். பின்பு, தான் பழக்கிய விலங்குகளால் இழுக்கச்செய்து வண்டியை ஓட்டினான். இந்த வண்டியில் எல்லாப் பொருத்துகளும் மரத்தினாலேயே செய்யப் பட்டன. அடுத்து தோல்களினால் இணைத்தான். உலோககாலம் தோன்றியபின் உலோகங்களின் பிணைப்பு வண்டியை வெகுவாக முன்னேற்றிவிட்டது; வேகமாக, பத்திரமாக ஓடச்செய்தது. எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட இத்தகைய வண்டிகளே பெரிதும் உதவின.

நாகரிகம் முழுதும் ஆற்றோரங்களிலேயே தொடங்கியதால் எல்லாவித வேலைகளும் ஆறுகளை அடுத்தே நடைபெற்றன. தரைவழியாகப் பயணப்படுவதைவிட ஆறு மூலமாகச் செல்வதே எளிதாக அமைந்தது. தரையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க எப்படி தன் கால்களையே முதலில் நம்பினானோ, அதே போல ஆற்றைக் கடக்க மனிதன் முதலில் தன்கைகளின் வலுவை நம்பியே நீச்சல் அடித்தான். தன் வலுவை வீணாக்க விரும்பாத அவன் மிதக்கும் மரக்கட்டையை ஆதாரமாக்கிக் கொண்டு தண்ணீரில் ஆற்றுப் போக்கில் மிதந்தான். பல கட்டைகளை ஒன்று சேர்த்துக் கட்டி மிதப்பதால் தனக்கு வேண்டிய பொருட்களையும் தன்னுடன் எடுத்துச்செல்லலாம் என்று அறிந்து அத்தகைய கட்டு மரங்களை உருவாக்கினான்; இவற்றை முதலில் நைல்