பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

விஞ்ஞானத்தின் கதை

அங்கங்கே மக்கள் அதை வியப்புடன் கண்டு பூரிப்பினால் ஆரவாரம் செய்தனர். “ மணிக்கு மூன்று மைல் பயணம் செய்த மனிதன் எங்கே, பதினைந்து மைல் பயணம் செய்யும் நாம் எங்கே!" என்ற மகிழ்ச்சி அவர்களது குரலில் பின்னணியாக அமைந்தது. அதன்பின் பன்னிரண்டு ஆண்டுகளில் அந்தப் புகைவண்டியின் வேகம் மணிக்கு இருபது மைல் ஆயிற்று. இன்று உலகெங்கிலும் ரயில் தண்டவாளங்கள் வளையமிடுகின்றன. கப்பல்கள் கடல்களை வளையமிடுகின்றன. இவை இரண்டும் உலகைச் சுறுசுறுப்பாக சுழல வைக்கின்றன.

பறவைகளைப்போல் பறக்கவேண்டும் என்று மனிதனுக்கு நெடுங்காலமாக ஆசை. வழிவழி வந்திருக்கும் தேவதைக் கதைகளால் இதை நாம் உணரலாம். அந்த ஆசை கற்பனையோடு நின்றுவிடாமல் செயலிலும் உருவாயிற்று.

மனிதன் முதலில் காற்றைவிட எடைக்குறைவான ஹைட்ரஜன் வாயுவை பெரிய அளவு பலூன்களில் அடைத்து அவற்றோடு பறக்க அவன் கற்றுக்கொண டான்.சுமார் நூற்றைம்பது ஆண்டுகள்வரை இம்முறை வழக்கில் இருந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த லியானார்டோ டா-வின்சி வானத்தில் பறக்கும் முயற்சியைத் தொடங்கி வைத்தார். அவருக்குப் பின் சிறிது இடைக்காலம் விட்டு இரசவாதிகளான கேய்லி, ஜான் டாமியன், லாங்லி முதலியோர் இத்துறையில் ஈடுபட்டு உழைத்தார்கள். லாங்லி இதில் ஓரளவு வெற்றி கண்டார் என்று சொல்லலாம். நீராவி என்ஜின் பழக்கத்திற்கு