பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயணம்

67

அவருடைய கனவு சிறிது சிறிதாக நனவாகிக்கொண்டு வருகிறது.

வண்டிகள் சீர்திருத்தப் படுவது போலவே அவை செல்லும் பாதைகள் சீர்திருத்தப் படுமானால் பயணத்தின் வேகம் அதிகரிக்குமல்லவா? ஸ்காட் நாட்டைச் சேர்ந்த மாக்கடம் என்பவர் பாதையைச் செம்மைப் படுத்தும் துறையில் வேலை செய்து சரளைக் கற்களினால் நல்ல தொரு புதுப் பாதையை அமைத்தார். அதற்குப் பின் கான்க்ரீட் பாதைகளும், தார் பூசப்பட்ட பாதைகளும் உருவாகியிருக்கின்றன. சில இடங்களில் ரப்பர் இணைத்த பாதைகள் கூட உருவாக்கப்பட்டிருக்கின்றன. வண்டிகளை வேகமாகச் செலுத்த கி.பி. 1887-இல் டன்லப் என்பவர் ஒரு புதிய உத்தியைக் கையாண்டார். வண்டிகளின் சக்கரங்களை, கெட்டியான ரப்பரால் உருவாக்காமல் காற்றடைத்த ரப்பர் ‘டயர்’களைச் சக்கரங்களுடன் பொருத்தினார்.

முன்னேற்றப் பாதையைக் குறிப்பிடும்போது நாம் சைக்கிளை மறந்து விடுவதற்கில்லை. இது அண்மையில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. கி. பி. 1816-இல் பிரஞ்சுக்காரர் ஒருவரால் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய நிலையில் உள்ளதைப் போன்று அன்று சைக்கிள் இருக்கவில்லை. அன்று சைக்கிளில் 'ஏறிச்' செல்ல முடியாது; 'தள்ளிச்' செல்ல வேண்டும். பொருட்களைச் சுமப்பதற்காக இது முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கொள்ளலாம். கி.பி. 1840-இல் காலடிகள் இணைக்கப்பட்டன. (Pedals) (முன் சக்கரத்தோடு) முன் சக்கரம் பெரிதாகவும் பின் சக்கரம் சிறிதாகவும் அமைந்திருந்தன. இத்தகைய சைக்கிளில் இன்னொரு விந்தை என்ன