பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

விஞ்ஞானத்தின் கதை

மூலமாக பிரயாணிகள் ஏறவோ இறங்கவோ முடியும். நிலத்தில் சாகுபடி செய்யவும், கலகங்களையும் போக்குவரத்தையும் போலீசார் கட்டுப்படுத்தவும் இது மிகவும் உதவியாக உள்ளது. இதை வானத்தில் பறக்கும் மோட்டார் கார் என்று கொள்ளலாம்.

ஓ! இன்னும் மோட்டார் காரைப்பற்றி நாம் பேசிக் கொள்ளவில்லையா? அதைப்பற்றி இப்போது கவனிப்போம்.

மோட்டார்கார் உருவாவதற்கான முயற்சிக்கு சற்றேறக்குறைய கி. பி. 1862-இல் ரோச்சாஸ் என்ற பிரெஞ்சு விஞ்ஞானி வித்திட்டார். அதற்குப் பின் லினாய்ரா, ஒட்டோ, டீஸல் முதலியவர்கள் அவ்வப்போது மோட்டார்காரில் சீர்திருத்தம் செய்தார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி ஃபோர்டு என்பவர்தான் மக்களுக்கு வசதியான மோட்டார் காரை வனைந்தார்; அவருடைய காலத்திற்கு முன் மோட்டார் கார் என்பது மிகப் பெரும் பணக்காரர்களால் மட்டுமே வாங்கக் கூடியதாயிருந்தது. அப்படி வாங்கினாலும் வீண் ஆடம்பரத்திற்காகவும், ஒட்டப் பந்தயங்களுக்காகவும் பயன் படுத்தப்பட்டன. தம் வீட்டுப் புழக்கடையில் பொழுது போக்குக்காகத் தொடங்கிய மோட்டார்த் தொழிலில் ஹென்றி ஃபோர்டு பெருத்த இலாபம் கண்டார். இன்று அமெரிக்காவில் ஐந்து கோடிக் குடும்பங்கள் உள்ளன. அவற்றுக்குச் சொந்தமான கார்களோ ஐந்து கோடிக்கும் அதிகம். இதை ஏன் குறிப்பிடுகிருேம்? எல்லோரும் வாங்கும்படியாக எளிய விலையில் கார்களைத் தயாரிக்க அன்று அவர் ஈடுபட்டார்.