பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

விஞ்ஞானத்தின் கதை


இருக்கக்கூடிய கப்பல்களும் ஆகாய விமானங்களும் மனிதனால் இயக்கப்படாமல் இத் தந்தி முறை மூலம் இயக்கப்படுகின்றன. இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது சில ஆகாய விமானங்களும் கப்பல்களும் இம்முறையினால் நாசவேலைக்குப் பயன்படுத்தப்பட்டன.

மின்சார விளக்கு, வானொலி, டெலிவிசன்....... இப்படி எத்தனையோ சாதனங்கள் மின்சாரத்தின் விளைவைப் பயன்படுத்தி விந்தை புரிகின்றன.

அணையால் தடுக்கப்பட்ட ஆற்றோட்டங்களாலும், அருவிகளாலும் பெரும் அளவில் உண்டாக்கப்பட்டு இன்று மின்சாரம் மனித இனத்திற்குப் பெரும் பயனைத் தருகின்றது.

மின்சார விந்தை ஈடறியா விந்தை!

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய்—எங்கள் இறைவா! இறைவா ! இறைவா!"