பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்சாரம்

73

மாணவருக்கு அவர் ஆசிரியராக இருந்தார். பள்ளிக்கூடப் பாடங்களைத் தெளிவுறக் கற்றுக் கொடுக்க புதிய உத்திகளைக் கையாண்டதின் விளைவாக தொலைபேசியைக் கண்டுபிடித்தார். இவரோடு ஒத்துழைத்தவர் இவருடைய நண்பர் வாட்சன். ஒரு நாள் இருவரும் ஓர் உயர்ந்த வீட்டில் நிலப்பகுதியிலிருந்து மாடிவரை கம்பியைப் பொருத்தினார்கள். வாட்சன் கீழே நின்று கொண்டிருந்தார்; கிரகாம் பெல் மாடியில் நின்றிருந்தார். சில விநாடிகள் கழிந்ததும், "வாட்சன், இங்கே வா!” என்று கிரகாம் பெல் கூப்பிட்டது கம்பியின் வழியாக வாட்சனுக்குத் தெளிவாகக் கேட்டது. அன்று பிறந்த தொலைபேசி கடலடி வழியாகக் கூடச் சென்று உலகெங்கிலும் பரவி விட்டது. தந்தியைப் போல் அல்லாமல் இதன் மூலம் எந்த மொழியிலும் பேசிக்கொள்ளலாம்.

செய்திகளைப் பரிமாறிக்கொள்வதில் வியப்புக்குரிய இடம் பெறுகிறது கம்பி-இல்லாத்-தந்தி. இதை கி. பி. 1875-இல் இத்தாலியைச் சேர்ந்த மார்க்கோனி என்பவர் கண்டுபிடித்தார். இதனால் கப்பலில் உள்ளோருக்கும், நிலத்தில் உள்ளோருக்கும், ஆகாயவிமானத்தில் உள்ளோருக்கும் செய்தி பரிமாற்றப்பட மிகவும் வசதியாக இருக்கிறது. கம்பி-இல்லாத்-தந்தி மூலம் செய்தி கி.பி.1901-இல் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்பு இப் புதிய முறையின் நன்மை தெளிவாகப் புலப்பட்டது. இம் முறையினால் கடலில் கப்பல் விபத்துக்கள் குறைந்திருக்கின்றன. வழி தவறிவிட்ட கப்பல்கள்கூட எளிதில் அருகில் இருக்கும் கரை சேரலாம். எங்கோ தொலைவில்