பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

விஞ்ஞானத்தின் கதை

இத் தந்தியை மனித சமுதாயத்திற்குப் பயன்படும் படியாகச் செய்தவர் சாமுவேல் மோர்சு. அவர் ஒரு சித்திரக்காரர். மின்சாரத்தின் உதவியால் நகருக்கு நகர் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினைத்துச் செயற்படத் தொடங்கினார். தாம் கண்டு பிடித்த ஒரு மின்சாரக் கருவியையும் நீண்ட செப்புக் கம்பிகளையும் மட்டுமே வைத்துக்கொண்டு அவர் முயற்சியில் இறங்கியபோது மக்கள் இவரை எள்ளி நகையாடினர். மோர்சு அதைப் பொருட்படுத்தவில்லை. அவருடைய செல்வம் எல்லாம் குறைந்து வறியரானார். அந் நகரிலுள்ள பொருளாதாரக் குழுவினரிடம் சென்று உதவி நாடினார். மிகுந்த தயக்கத்திற்குப் பின் அக்குழு பண உதவி செய்தது. பன்னிரண்டாண்டுகளில் கடும் உழைப்பிற்குப் பின் மோர்சு முதல் தந்திப் பாதையை கி.பி.1837-இல் பால்டிமோர் நகருக்கும் வாசிங்டன் நகருக்கும் இடையே அமைத்து வெற்றிகண்டார். ஆனாலும் உடனே பழக்கத்திற்கு வந்துவிடவில்லை. மோர்சு நியூயார்க் கலாசாலையில் தந்தியைப் பற்றி விரிவுரையாற்றினார். அதன் பின்பே கி.பி. 1844-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதியன்று முதல் தந்திப்பாதையில் செய்தி அனுப்பப்பட்டு பின்னர் நாடெங்கிலும் பரவியது. இன்று உலகின் செய்திப் பரிவர்த்தனை தந்தியின் மூலம் ஒரு சில செகண்டுகளுக்குள் முடிவடைந்துவிடும் நிலை வியப்பிற்குரியது. இத்தந்திக்கலை தமிழில் நடைபெற இப்போது முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கு இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பவர் புதிய முயற்சியைத் தொடங்கினார். ஊமையரும் செவிடருமான சில