பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

கன் ருயிருப்பதாக அனுதினமும் தந்தி வந்து கொண்டிருக்கது. இவ்விதம் பதினேந்துவாரங்கள் சென்றபின், “இனி எவ்வித பயமும் இல்லை, இந் தப் பையன் பிழைத்துக்கொண்டான், இதுவே எனக்குப் போதுமான கைம்மாறு’ என்று எண்ணி மகிழ்ந்தார்.

ஆமாம், அவர் மானிட ஜாதிக்குச் செய்துள்ள உபகாரத்துக்கு யாரால் கைம்மாறு செய்ய இய அலும் ஆயினும் அறிஞர்கள் அவர்க்கு அநேக விதமான கெளரவங்கள் அளிக்க முன்வந்தார்கள். பிரான்ஸ் தேசத்துப் பேர்போன இலக்கியச் சங் கத்தார் தங்கள் சங்கத்தில் ஆசிரியராக இருக்கு மாறு வேண்டிக்கொண்டார்கள். அப்படி அந்தச் சங்கத்தில் ஆசிரியப்பதவி ஏற்பவர்கள் அதை ஏற்குமுன் அங்கத்தினர்களைப் போய்ப் பார்ப்பது அநேக வருஷங்களாக கடந்துவரும் சம்பிரதாயம். ஆல்ை அறிஞர் சிகாமணியாகிய அலக்ஸாண்டர் மோஸ் ‘ஆஹா அவர் என்னிடம் வரவேண்டாம், கானே அவரிடம் செல்வேன்” என்று கூறி பாஸ்ட் டியரிடம் சென்று தம்முடைய வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டார். அதன் பின் பதவி ஏற் கும் வைபவத்தில் கலைமைவகித்த அந்தச் சங்கத் தின் அத்யட்சராகிய ரெனன் தாங்கள் எங்கள் சங்கத்தில் சேர்ந்து கொள்ளச் சம்மதித்தது எங் கள் பாக்கியமாகும். தங்கள் ஆராய்ச்சியால் கிடைக் கும் புகழ் எங்களுக்கும் கிடைக்கும் அல்லவா ? தங் களுக்கு நல்வரவு கூறுகின்றாேம்’ என்று கூறினர். 139