பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள் என்பவருக்கு எழுதிய கடிதங்கள், சிறந்த பிரசங்கிகளாக விரும்புவோருக்கு அளவற்ற உதவி அளிப்பனவாகக் காணப்படுகின்றன. பாரடேக் குத் தாமும் ஒரு நல்ல பிரசங்கி ஆகவேண்டும் என்ற ஆசை அதிகம். அதற்காக சாவன்மை உண் டாகச் செய்வதற்கான மார்க்கங்களைக் குறித்துக் கற்றுக்கொடுத்துவங் த ஸ் மார் ட் என்பவரிடம் பணம் கொடுத்துப் பாடம் கேட்டுவந்தார்.

பாரடே அறிஞர் டேவியிடம் வேலைபார்க்க ஆரம்பித்து ஆறுமாத காலமானதும், டேவி ஐரோப்பாவில் இரண்டு வருஷ காலம் சுற்றுப் பிர யாணம் செய்து அங்குள்ள விஞ்ஞானிகளுடன் உறவாடி வர எண்ணினர். பாரடேயைத் தம்முடன் வருமாறு அழைத்தார். ரஸாயன சாஸ்திரத்திலும் இதர விஞ்ஞானங்களிலும் தமக்குள்ள அறிவை விருத்தி செய்துகொள்வதற்கு இதுபோன்ற நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது என்று எண்ணி டேவி யிடம் ஆகட்டும் என்று இசைக்தார்.

அப்படியே அவர் 1813-ம் வருஷம் அக்டோபர் மாதத்தில் டேவியுடன் ஐரோப்பா சென்றார். அப்படிப் புறப்பட்ட தினமுதல் வந்துசேரும் வரைத் தாம் கண்டவற்றையும் புதிதாக அறிந்தவற் றையும் தினக்குறிப்புக்களாக எழுதி வந்தார். அத் துடன் அவைகளைப்பற்றித் தம் நண்பர்கட்கும் தாயார்க்கும் கடிதங்கள் எழுதியும் வந்தார்.

அங்தக் கடிதங்களிலிருந்து அவருக்குத் தம்மு டைய அண்ணனிடமிருந்த அன்பின் மிகுதியும். 176