பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

-

அவ்வளவுதான், ஆர்க்கிமிடீஸைத் தேடி ஒரு போர்வீரன் அனுப்பப்பட்டான். அவன் பல தெருக்களிலும் அலைந்துதிரிந்து, கடைசியாக அவ ருடைய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே தரையில் உட்கார்ந்துகொண்டு ஒரு கிழவர் ஒர் ஒட் டின் மீது சில கோடுகள் கிழித்துக்கொண்டிருந்தார். அது அந்த வீரனுக்கு அர்த்தமாகவில்லை, விகோக மாகவே இருந்தது. தான் கேடிவங்க ஆர்க்கிமிடீஸ் அவராகத்தானிருப்பார் என்று எண்ணிக்கொண்டு அவரைப் பார்த்து, அங்கே என்ன செய்கிறீர்? எங்கள் சேனதிபதி உம்மைக் கூட்டிவரச் சொன் னர், என்ளுேடு வாரும்’ என்று சொன்னன்.

ஆனல், அவன் சொன்னது ஒன்றும் அவரு டைய செவியில் புகவேயில்லை. அவருடைய மனம் அங்கில்லை. அது அறிவு லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அவர் எந்த விஷயத்தைப் பற்றி ஆராய்க் து கொண்டிருந்தாரோ, அது யாருக்கும் தெரியாது. அந்தப் போர்வீரன், ‘என்ன, கான் சொல்வது கேட்க வில்லையா? இதோ பாரும் ! எங்கள் தலைவர் உம்மை அழைக்கிறார், வாரும்! என்று மறுபடியும் இரைந்தான்.

அந்த இரைச்சலைக் கேட்டதும் அவர் கிமிர்ந்து பார்த்தார். அவரை அழைப்பவன் யார்? அவன் கூறும் தலைவன் யார்? அவருக்கு ஒன்றும் விளங்க வில்லை. ஆமாம், அவருக்கு நகரம் பிடிபட்டுப் போன விஷயமே தெரியாது. எதிரிக் துருப்புகள் ஊருக்குள் ஏராளமாக வந்து இறங்கிவிட்டதும், 14