பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லர் ஹம்ப்ரி டேவி

தினந்தோறும் இலக்கியம், அரசியல், சமயம் போன்ற பல விஷயங்களைப் பற்றிப் பிரசங்கங்கள் கடைபெற்று வருகின்றன. ஆனல் சயன்ஸ் என் அனும் விஞ்ஞானத்தைப் பற்றி யாரும் பிரசங்கம் செய்வதாகத் தெரியவில்லை. பாடசாலைகளில் ஆசி ரியர்கள் கற்றுக்கொடுக்கிருரர்கள். மாணவர்கள் கற்கிருரர்கள். அத்துடன் சரி.

ஆனல் விஞ்ஞானமும் மற்ற விஷயங்களைப் போலவே அவசியமானதே. அவசியமானதுடன் சுவையுடையதுமாகும். அதையும் மற்றவைகளைப் போலவே சுவையுடையதாகவும் சாதாரண ஜனங் களுக்குத் தெரியக்கூடிய விதத்தில் சுலபமானதாக வும் பிரசங்கங்கள் நிகழ்ந்தால் கட்டாயமாக ஜனங் கள் அவைகளைப் பிரியத்துடன் கேட்பார்கள், கேட்டுப் பயன் அடைவார்கள் என்பதில் சந்தேக மில்லை. அந்த மாதிரி நமது விஞ்ஞானிகள் சாதா ரண மக்களுக்குப் பிரசங்கம் செய்யும் நாள் எதுவோ அறியோம்.

கம்முடைய காட்டிலிருந்து வரும் நிலைமைதான் ஆங்கில காட்டிலும் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத் தில் இருந்து வந்தது. அந்தக் காலத்தில் ஆங்கில காட்டில் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதிலும் விஞ் ஞானத்தில் அக்கரைகொண்டவர்கள் எத்தனைபேர் என்று கணக்கிட்டால் சுமார் நூறுபேருக்கு அதிக மாயிரார் என்றே சரித்திரம் கூறுகிறது. 198