பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

இதுதான் முதன்முதலாக மனிதன் உண்டாக் கிய மின்சார ஒளியாகும். கரிக்கம்பிகளுக் கிடை யில் உள்ள காற்று உஷ்ணத்தால் மேலே கிளம்பு கின்றது. அதனால் அந்த ஒளி கம்பிகளுக்கிடையில் வளைந்து காணப்பட்டது. அதல்ை டேவி அதற்கு வளையும் ஒளி என்று பெயர் கொடுத்தார். இந்தக் காலத்திலும், ரயில் எஞ்சின் முதலியவைகளின் முன்பக்கத்தில் வெகுதுராம் வரை வெளிச்சம் தரும்படியாக வைக்கப்பட்டிருக்கும் செர்ச் லேட் என்னும் விளக்குகள் எல்லாம் டேவி கண்டுபிடித்த வளைவு விளக்குப் போன்றவைகளே. டேவியே வளைவு விளக்குகளிலுள்ள கரிக்கம்பிகள் காற்றில் லாத இடத்தில் அதிகப் பிரகாசமான ஒளியைத் தருகின்றன என்பதையும் கண்டு சொன்னர். அத் துடன் கரிக் கம்பிகளின் முனைகளில் அதற்குமுன் யாராலும் உண்டாக்க முடியாத அளவு உஷ்ணம் உண்டாவதையும் டேவி கண்டு சொன்னர். ஜலத் தைக் கொதிக்கவைக்க வேண்டுமானல் 100 டிக்கிரி உஷ்ணம் தேவையாகும். ஆனல் கரிக்கம்பிகளின் முனையில் உண்டாகும் உஷ்ணம் 3000 டிக்கிரி என்று கணக்கிடப்படுகிறது. சாதாரணமாக உண் டாக்கும் உஷ்ணத்தில் தங்கம் முதலிய உலோகங் கள் உருகும், பிளாட்டினம் என்னும் உலோகம் மட்டும் உருகாது. ஆனல் அதுவும் கூட டேவி உண் டாக்கிய உஷ்ணத்தில் அரக்குப்போல் உருகி ஒடிற்று.

முதன் முதலாக மின்சாரவிளக்கைக் கண்டு பிடித்ததுபோல இவரே மின்சாரத்தை முதன்முத 214