பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

இவ்விதமாக டேவி வாரங்தோறும் புதிது புதி தாகப் பல விஷயங்களே வெளியிட்டுவந்தார். இட மில்லை என்று அனுப்புமாறு ஜனங்கள் இவருடைய பிரசங்கத்தைக் கேட்கத் திரள்திரளாக வந்து கொண்டிருந்தார்கள். விஞ்ஞானிகள் புகழ ஆரம் பித்தார்கள். பிரபுக்கள் விருத்துக்கு அழைத்தார் ‘கள். பெரிய பணக்காரரும் ஆகிவிட்டார்.

இங்கிலாந்து தேசத்துத் தலைசிறந்த விஞ் ஞானசங்கம்ாகிய ராயல் ஸொஸைட் டியார் அவரைத் தங்களுடன் அங்கத்தினராகச் சேர்த்துக்கொண் டார்கள்.

அப்பொழுது இங்கிலாந்துக்கும் ப்ரான்ஸ்- க் கும் போர் நடந்துகொண்டிருந்த பாதிலும், ப்ரா ன்ஸ்தேசத்து விஞ்ஞானசங்கத தார் டேவிக்குத் தங்கப்பதக்கம் அனுப்பிவைத்தார்கள். அதை வே ண் டா .ெ ம ன்று அனுப்பிவிடும்படி சிலர் யோசனை சொன்னர்கள். ஆனல் டேவி அரசாங் கங்கள் சண்டையிட்டால் எங்களுக்கென்ன ? நாங் கள் விஞ்ஞானிகள், எங்களுக்குள் சண்டை கிடை யாது.’ என்று கூறினர்.

அதன்பின் 1812ல் இங்கிலிஷ் அரசர் டேவிக்கு “ஸர்’ என்னும் பட்டத்தை வழங்கினர்.

இந்த விதமாக அவருக்குப் பேரும் புகழும் பெருகி வந்ததாயினும், அவருடைய மனம் அவை களில் சிக்கிப்போகாமல் தாமரை இலைத் தண்ணிர் போல் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலேயே ஆழ்ந்து போயிருந்தது. எப்பொழுதும் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டிருந்ததால், சிலவேளைகளில் விருந்துக்கு

220 i.