பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியேர்

கன் ய’ என்.று வெகு சமக்கார ப இ. வாதிக் அப் பார்த்தார்.

ஆல்ை கியாதிபதிகள் அதைக் கொஞ்சமும் wம்.யக்கொள்ளவில்லை. வேத நூல் கூருத விஷயம் ைெடயாது. அது கூறுவதே உண்மை என்று அவர்கள் பரிபூரணமாக நம்பினர்கள். ஆதலால் கலிலியோ கடைசியாகத் தாம் தவறு செய்துவிட்ட தாக ஒப்புக்கொண்டார்.

அதன் பேரில் அவருக்குச் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இவ் வி த ம் மதவெறியர்கள் அவரைச் சிறைக் கோட்டத்துக்குள் தள்ளிவிட்ட போதிலும் போப்பாண்டவரும் சமயாச்சாரியர் களில் அறிவாளிகளாய் இருந்தவர்களும் அவரிடக் தில் அனுதாபமேகாட்டினர்கள். அந்தப்பெரியோர் கள் உள்ளுர கலிலியோவின் சிக் காந்தத்தையே கம்பினர்கள். அவர்களில் முக்கிய ஸ்தானம் வகித்த பெல்லார் மைன் என்னும் மதாச்சாரியார் ‘’ சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை நிரூபிக்க முடியுமானல், அப்படி கிரூபிக்கப்படுவதை மறுக் காமல் அதற்குத் தக்கவாறு வேத நூல் வாசகங்களை அர்க்கப்படுத்திக் கொள் வ தே முறையாகும் ‘ என்று பின்னல் எழுதிவைத்தார். அதல்ைகலிலியோ சிறையில் 22 நாட்கள் மட்டுமே இருந்தார். அதன் பின் அவரை வீயன்ன என்னும் ஊருக்குப்போய்

விடும்படி கூறி அனுப்பிவைத்தார்கள்.

45